Posts

Showing posts from October, 2017

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்

Image
அகரமுதல 210, ஐப்பசி12-18, 2048 /  அட்டோபர் 29 – நவம்பர் 04,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         29 அக்தோபர் 2017         கருத்திற்காக.. திருப்பூர்தேவியின் குறும்பாக்கள்  மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர் அவன் அந்திமத்தில்! ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி! ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்…! ++ வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

வேண்டாமே இந்தப் ப(பு)கை! – அகரம்.அமுதா

Image
அகரமுதல 210, ஐப்பசி12-18, 2048 /  அட்டோபர் 29 – நவம்பர் 04,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         29 அக்தோபர் 2017         கருத்திற்காக.. வேண்டாமே இந்தப் ப(பு)கை!    நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப் புகைக்கிடங் காதல் புதிர்!   வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை நம்புகையில் வீழும் நலம்!   நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல் தகையில்லை வேண்டும் தடை!   காற்றிற்கும் மாசாகும் கைப்பிடித்தார் வாழ்வடைக்கும் கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!   புகையின் சுவைகண்டார் போயொழிய வேறோர் பகையில் புகையே பகை!   சிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடின் பொறியைந்தும் பாழாம் புரி!   பற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும் புற்றுவைக்கும் வேண்டாம் புகை!   பஞ்சுண்(டு) எனினும் பரிந்து புகைக்குங்கால் நஞ்சுண்டு சாவாய் நலிந்து!   வெண்குழலை நாடொறும் வேண்டிப் புகைத்தக்கால் மண்குழியில் வீழ்வாய் மரித்து!   புகைப்பான் இடன்நாடிப் பூம்பழுதைக் காட்டி நகைப்பான் எமனும் நயந்து!     அகரம்.அமுதா http://agaramamutha.blogspot.in/2008/12/blog-post_17

கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன் : வெ.அரங்கராசன்

Image
அகரமுதல 209, ஐப்பசி 05-11,  2048 /  அட்டோபர் 22 - 28,  2017 இலக்குவனார் திருவள்ளுவன்         22 அக்தோபர் 2017         கருத்திற்காக.. கண்ணதாசன்   –  வண்ணக்கவி   வாசன்             சிறுகூடல்பட்டி  —  தந்த            பெருங்கவிப்   பெட்டி !            தேன்தமிழ்த்   தொட்டி ! —  பனங்            கற்கண்டுக்   கட்டி !            பைந்தமிழ்ப்   புலமையில்   நீஎன்றும்   கெட்டி !                  கவிச்சுவை   உள்ளத்தில்   நிற்குமே   ஒட்டி !            வஞ்சரை   உன்பாட்டு   உதைக்குமே   எட்டி !            கொஞ்சமும்   தயங்காது   விரட்டுமே   முட்டி !                                கண்ணதாசன் ,  வண்ணக்கவி   வாசன் !            பண்ணுள்ள   பாட்டுக்குநீ   நேசன் !            தண்ணியசீர்   ஆசுகவி   தாசன் !            எண்ணிலாப்   படைப்புக்குமகா   ராசன் !                                பண்டிதரின்   பரண்மேலே   படுத்திருந்த   வண்டமிழின்                      மண்டுசுவைப்   பாக்கள்   அனைத்தையும்   கீழிறக்கிக் ,            கொண்டதமிழ்ப்   புலமையால்    எளியபுது   விதையாக்க