திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி : வெ. அரங்கராசன்

 

திருக்குறள் அறுசொல் உரை

 3. காமத்துப் பால்

15. கற்பு இயல்   

131. புலவி

தலைமக்கள் ஒருவர்மீது ஒருவர்,
கொள்ளும் பொய்ச்சினமும், பிணக்கும்

(01-05 தலைவி சொல்லியவை)
  1. புல்லா(து) இராஅப் புலத்தை, அவர்உறும்
      அல்லல்நோய் காண்கம் சிறிது.
       அவர்படும் துயரைக் காண்போம்
        சிறிது; மனமே! நீ வேறுபடு.

 1302. உப்(பு)அமைந்(து) அற்(று)ஆல் புலவி, அதுசிறிது
      மிக்(கு)அற்(று)ஆல் நீள விடல்.
        உணவில் உப்பின் அளவுபோல்
        இருந்தால்தான், பிணக்கும் சுவைக்கும்.

  1. அலந்தாரை அல்லல்நோய் செய்(து)அற்(று)ஆல், தம்மைப்
      புலந்தாரைப், புல்லா விடல்.
        ஊடியாரைத் தழுவாமை, வருந்துவாரை
        மேலும் வருத்துதல் போல்ஆம்.   

  1. ஊடி யவரை உணராமை, வாடிய
      வள்ளி முதல்அரிந்(து) அற்று.
        ஊடியாரை உணராமை, வாடுகொடியை
        வேரோடு அறுத்தல் போல்ஆம்.

  1. நலத்தகை நல்லவர்க்(கு) ஏஎர், புலத்தகை
      பூஅன்ன கண்ணார் அகத்து.
       மகளிர் புலவியும், நலம்சார்
        ஆடவரை மகிழ்விக்கும் அழகே.

       (06-07 தலைவன் சொல்லியவை)

  1. துனியும், புலவியும் இல்ஆயின், காமம்,
      கனியும், கருக்காயும் அற்று.
      பெரும்ஊடல், சிறுஊடல் இல்லாக்
        காதல், கனி,காய் போன்றது.
                       
  1. ஊடலின் உண்(டு)ஆங்(கு)ஓர் துன்பம், புணர்வது,
      நீடுவ(து) அன்றுகொல், என்று.
      “கூடல் நீளுமோ? நீளாதோ?”என,
         ஊடலிலும் ஓர்துன்பம் உண்டு.

       (08-10 தலைவி சொல்லியவை)

  1. நோதல் எவன்மற்று? நொந்தார்என்(று), அஃ(து)அறியும்,
      காதலர் இல்லா வழி.
      “என்னால் நொந்துள்ளாள்என அறியாக்
         காதலரை நொந்துதான் பயன்என்?

  1. நீரும், நிழலது இனிதே; புலவியும்,
      வீழுநர் கண்ணே இனிது.
      நிழலில் நீரும் இனிது;
        விரும்புவாரிடம், பிணக்கும் இனிது.

  1. ஊடல் உணங்க விடுவாரோ(டு), என்நெஞ்சம்,
     “கூடுவேம்”, என்ப(து) அவா.
    ஊடலை நீக்காரோடு, ”கூடுவோம்
        என்று நினைத்தல் பேராசைதான்.   
பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue