Posts

Showing posts from April, 2017

தமிழியக்கக் கனல் மூட்டிய பாரதிதாசன்! – கவிக்கோ ஞானச்செல்வன்

Image
அகரமுதல 183,   சித்திரை 10, 2048 / ஏப்பிரல் 23, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      23 ஏப்பிரல் 2017       கருத்திற்காக.. தமிழியக்கக் கனல் மூட்டியவர் நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்! பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப் பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப் புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்! மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும் மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன் றில்லை! சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம் தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை! மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ? மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும் செங்கரும்பும் நறும்பாலும் தேனும் பாகும் செந்தமிழ்க்கு நிகராமோ என்ற மேலோர்! தமிழியக்கம் எனும்கனலைத் தமிழர் நெஞ்சில் தழைத்தெரியச் செய்ததனால் தமிழர் இன்று தமிழ்வாழ்வு காணுதற்கு முயலு கின்றோம்! தம்மானம் காக்கின்ற உணர்வு பெற்றோம்! தமிழியக்கம் எனும்தீயால் தமிழ்ப்பற்று றி

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை – இல. பிரகாசம்

Image
அகரமுதல 183,   சித்திரை 10, 2048 / ஏப்பிரல் 23, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      23 ஏப்பிரல் 2017       கருத்திற்காக.. பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை பெண்ணுரிமைச் சிந்தனை: “ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டிலே” எனும் பாரதியாரின் பெண்ணியச் சிந்தனையையும், தந்தை பெரியார் அவர்களது பெண்ணியம், பகுத்தறிவுக் கொள்கையினையும் தனது சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் வழியாக வஞ்சி என்னும் பெண்ணின் பகுத்தறிவுக் குரலினை எதிரொலிப்புச் செய்கிறார். பெண்ணுரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு:   பெண்ணிற்குப் பேச்சுரிமை இல்லாமையால், ஒரு  குமுகம்(சமூகம்) எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்படும் என்று தான் படைத்த பாத்திரமான வஞ்சியின் நிலையிலிருந்து எடுத்துரைக்கிறார்.   “ பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டா என்கின்றீரோ? மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?  பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே ஊமை என்று பெண்ணை உரைக்கு மட்டும் உள்ளடங்கும் ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு புலன் அற்

பாரதிதாசனின் தமிழ் உணர்வு

Image
அகரமுதல 183,   சித்திரை 10, 2048 / ஏப்பிரல் 23, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      23 ஏப்பிரல் 2017       கருத்திற்காக..     பாரதிதாசனின் தமிழ் உணர்வு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்பது அவரது எழுத்துகள் அனைத்திலும் துடிப்பாக இடம் பெறுவதைக் காணலாம். தமிழ் மொழியில் ஈடுபாடு தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் முத்தமிழை முழுமையாக வலம் வந்திருக்கின்றன. உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும் . அந்த அளவிற்குத் தமிழ் மொழியை நேசித்தார். காதலி ஒருத்தி தன் காதலனோடு கொஞ்சிப் பேசும் மொழிகூடத் தமிழ் மொழியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர். மங்கை ஒருத்தி தரும் சுகமும் தமிழ்மொழிக்கு ஈடாகாது என்று பேசியவர்.” உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்று வாழ்ந்தார் பாவேந்தர், வீரத்தாயில் ‘மலையைப் பெயர்க்கும் தோள் உடையோராக வளருங்கள், கீழ்ச் செயல்கள் விடுங்கள், வீரத்தைப் போற்றுங்கள், வீரத்தில் உயருங்கள்’ என்று அனைத்துத் தமிழர்கள