Skip to main content

மலரினும் மெல்லியது காதல் ! – இரா.இரவி



மலரினும் மெல்லியது காதல் !

மலரினும் மெல்லியது காதல் ஆனால்
மலையினும் வலியது காதல் !
ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால்
உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் !
தடைகள் ஆயிரம் வந்த போதும்
தகர்த்து இணைவதே உண்மைக் காதல் !
புறஅழகுப் பார்த்து வருவது அல்ல காதல்
அகஅழகு ஈர்த்து வருவதே மெய்யான காதல் !
என்னவென்று விளக்கமுடியாவிடினும்
ஏதோ ஒன்று இணையிடம் பிடித்து இருக்கும் !
இடையில் வந்தவள் என்றபோதும் மன
எடையில் உயர்ந்து நிற்பவள் காதலி !
உன்னத காதலிக்கு உள்ளத்தில் முதல் இடம்
உலகில் உள்ள உறவுகளுக்கு அடுத்த இடம் !
முதல் காதல் நினைவு என்பது இருவருக்கும்
மூச்சு இருக்கும் வரை நினைவு இருக்கும் !
உடலில் உயிர் உள்ளவரை இருவருக்கும்
உடலில் மூளையின் மூலையில் இருக்கும் !
காதல் உணர்வு என்பது சொல்லில் அடங்காது
காதலித்தவர்கள் மட்டுமே உணரும் உணர்வு !
காதலிக்கும் காலத்தில் உள்ள மனமகிழ்வு
காதலர்களுக்கு மண்ணில் காணும் சொர்க்கம் !
நேற்று இன்று நாளை என்று முக்காலமும்
நிலைத்து இருக்கும் ஒன்று ஒப்பற்ற காதல் !
கவிஞர் இரா .இரவி
(பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue