Skip to main content

சுந்தரச் சிலேடைகள் 5 : கோயில்மாடும் இளைஞனும்



சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை  அணி 5

ஊர்சுற்றும், ஓரிடத்தில் உன்னதமாய் நில்லாதாம்,
தார்வேந்தன் போலத் தலைதூக்கும்-மார்தட்டும்
சண்டையிடச் சக்திகொண்டு சாதிக்கும், கோமாடும்
விண்ணேர் இளைஞனும் ஒன்று.
பொருள்
கோயில்மாடு & இளைஞன்.
1) ஊர்சுற்றித் திரியும்.
2) ஒரிடத்தில் நிற்காமல் அங்குமிங்குமாக அலையும்.
3) மன்னன் தலைதூக்கிப் பார்ப்பதுபோல் பார்க்கும்
4) எதிரி யாரெனினும் மார்தட்டிச் சண்டையிடும்.
5) வெற்றி பெறும்வரையில்  போராடும்
எனவே, கோயில் மாடும் இளைஞனும் ஒன்றாம்

கட்டிக்குளம் ஒ .சுந்தரமூர்த்தி
கட்டிக்குளம்
ஒ .சுந்தரமூர்த்தி

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue