தமிழெனப் பொங்கிடு! – ப.கண்ணன்சேகர்




தமிழெனப் பொங்கிடு!


உழைத்திடப் பொங்கிடு!  உரிமைக்குப் பொங்கிடு
உதவிடப் பொங்கிடு  ஊருக்குப் பொங்கிடு
தழைத்திடப் பொங்கிடு  தமிழெனப் பொங்கிடு
தருமத்தைப் பொங்கிடு  தளராது பொங்கிடு
பிழையறப் பொங்கிடு  பெருமையாய்ப் பொங்கிடு
பிணக்கிலாப் பொங்கிடு  பார்போற்றப் பொங்கிடு
மழையெனப் பொங்கிடு  மலரெனப் பொங்கிடு
மதமிலாப் பொங்கிடு  மனிதனாய்ப் பொங்கிடு
இயற்கையோடு பொங்கிடு இரக்கதோடு பொங்கிடு
இணக்கமெனப் பொங்கிடு  எழிலாகப் பொங்கிடு
தயங்காமல் பொங்கிடு  தவறாது பொங்கிடு
தடுக்காமல் பொங்கிடு  தணிந்திடப் பொங்கிடு
வியந்திடப் பொங்கிடு  விடுதலைக்குப் பொங்கிடு
வேளாண்மை பொங்கிடு  வெற்றியால் பொங்கிடு
சுயமாகப் பொங்கிடு  சுடரொளிக்கப் பொங்கிடு
     சுகமெனப் பொங்கிடு  சுபமெனப் பொங்கிடு
நாட்டுயர்வைப் பொங்கிடு  நற்தமிழைப் பொங்கிடு
நயமுடன் பொங்கிடு  நல்லதைப் பொங்கிடு
கூட்டுறவைப் பொங்கிடு  கொள்கையெனப் பொங்கிடு
குற்றமின்றிப் பொங்கிடு  குலையாது பொங்கிடு
வாட்டமிலாப் பொங்கிடு  வனப்போடு பொங்கிடு
வறுமைதீரப் பொங்கிடு  வலிமையோடு பொங்கிடு
மாட்டோடு பொங்கிடு மஞ்சுவிரட்டிப் பொங்கிடு
மண்மணக்கப் பொங்கிடு  மாறாமல் பொங்கிடு!
  – ப.கண்ணன்சேகர், திமிரி
 பேசி:9698890108

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue