Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல்: வெ. அரங்கராசன்




(திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : தொடர்ச்சி)

திருக்குறள் அறுசொல் உரை
03. காமத்துப் பால்
14. களவு இயல்
  1. நாணுத் துறவு உரைத்தல்

காதலர் தம்தம் காதல்
மிகுதியை வெட்கம்விட்டு மொழிதல்

(01-07 தலைவன் சொல்லியவை)
1131 காமம் உழந்து வருந்தினார்(கு), ஏமம்,
     மடல்அல்ல(து) இல்லை வலி.
      “காதல் வெல்ல, மடல்குதிரை
        ஏறுதல்தான் மிகநல்ல வழி”.
  1. நோனா உடம்பும், உயிரும் மடல்ஏறும்,
      நாணினை நீக்கி நிறுத்து.
      “காதல்துயர் பொறாத உடல், உயிர்
        மடல்குதிரை ஏறத் துணியும்”.
  1. நாணொடு நல்ஆண்மை, பண்(டு)உடையேன்; இன்(று)உடையேன்
      காம்உற்றார் ஏறும் மடல்.
      “அன்று, வெட்கம், வீரம் இருந்தன.
        இன்றோ, மடல்ஏறும் நிலையில்”.
  1. காமக் கடும்புனல் உய்க்குமே, நாணொடு
      நல்ஆண்மை என்னும் புணை.
        “வெட்கம், வீரம்எனும் தோணியைக்,
        காமவெள்ளம் இழுத்துச் செல்லும்”.
  1. “தொடலைக் குறுந்தொடி தந்தாள், மடலொடு
      மாலை உழக்கும் துயர்”.
    “மடல்ஏறும் துயரும், மாலைப்
        பொழுதின் துயரும், என்காதலியால்”.
  1. “மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற;
      படல்ஒல்லாப் பேதைக்(கு)என் கண்.”
          “காதலி நினைப்பால், நள்ளிரவிலும்,
        மடல்மேல் ஏறுதலை நினைப்பேன்”.
  1. கடல்அன்ன காமம் உழந்தும், மடல்ஏறாப்
      பெண்ணின் பெரும்தக்க(து), இல்.
     “கடல்போல் காமம் நிறைந்தும்,
        மடல்ஏறாப் பெண்மையே பெருமை”.
       (08-10 தலைவி சொல்லியவை)
  1. நிறைஅரியர், மன்அளியர் என்னாது, காமம்,
      மறைஇறந்து மன்று படும்.
      “மனஉறுதியையும் மீறிக், காமம்,        .
        ஊரார் அறிய வெளிப்படும்”.
  1. அறி(கு)இலார் எல்லாரும் என்றே,என் காமம்,
      மறுகின் மறுகும் மருண்டு.
      “அறியார் எல்லாரும்”என, என்காமம்
         தெருஎல்லாம் சுற்றித் திரியும்”.
  1. யாம்கண்ணின் காண நகுப, அறி(வு)இல்லார்,
      யாம்பட்ட தாம்படா ஆறு.
      “யாம்படும் துன்பத்தைப் படாத
        அறிவுஇலார்தான், நேரில் சிரிக்கிறார்”.

பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue