Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26. அடக்க முடைமை




தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்
மாணவரியல்

 26.   அடக்க முடைமை
251.அடக்க மனம்புலத் தணுகா தடக்கல்.
அடக்கம் என்பது மனத்தை ஐம்புலன்களில் இருந்தும் காத்தல் ஆகும்
.252.அறிவினர்க் கென்று மடங்கி யொழுகல்.
அடக்கம் என்பது அறிஞர்களுக்கு எப்பொழுதும் அடங்கி நடத்தல் ஆகும்.
  1. அடக்கநன் னெறியி னடக்கச் செய்யும்.
அடக்கம் நல்லொழுக்க நெறியில் நடக்கச் செய்யும்.
  1. அடக்கமில் லாமை யதைக்கடக் கச்செய்யும்.
அடங்காமை நல்லொழுக்க நெறியை மீறச் செய்யும்.
  1. அடக்கம் பல்வகை யாக்கமுந் தருமே.
அடக்கம் பல வகையான செல்வங்களையும் தரும்.
  1. அடக்க மிலாமை யழிவெலாந் தருமே.
அடங்காமை எல்லாவற்றையும் அழித்துவிடும்.
  1. அடக்கமெய் வீட்டிற் கடிப்படி யாகும்.
அடக்கம் மெய்யாகிய வீட்டின் முதற்படியாகும்.
258.அப்படி யேறினா ரடைவரவ் வீடு.
அடக்கம் உடையவர் வீடுபேற்றை அடைவார்.
  1. அப்படி யேறா ராழ்வர்வெந் நரகு.
அடக்கம் இல்லாதவர் நரகத்தில் வீழ்வார்.
  1. ஆதலா லடக்க மநுதின மோம்புக.
ஆதலால் எப்பொழுதும் அடக்கத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்.
– வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue