கேட்டல் முறை – பவணந்தி முனிவர்





தலைப்பு-கேட்டல் முறை :thalaippu_kettalmurai

கேட்டல் முறை

ஒருமுறை கேட்போன் இருகால் கேட்பின்
பெருக நூலில் பிழைபாடு இலனே
முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும்.
ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
கால்கூறு அல்லது பற்றலன் ஆகும்.
அவ் வினையாளரொடு பயில்வகை ஒரு கால்
செவ்விதின் உரைப்ப அவ்இரு காலும்
மை அறு புலமை மாண்பு உடைத்தது ஆகும்.
  • பவணந்தி முனிவர் : நன்னூல்
  பாடங்கேட்பவன் ஒரு முறையுடன் நில்லாது இரண்டாம் முறையும் கேட்டானாயின்,  மிகுதியும் பிழையின்றிக் கற்றவனாவான். மூன்றாம் முறையும் கேட்டனாயின், ஆசிரியர் கற்பித்ததை உணர்ந்து பிறர்க்குச் சொல்லும்திறன்பெற்றவனாவான்.  ஆசிரியர் கற்பித்தவற்றை நிறைய கற்றாலும், அப்புலமைத்திறத்தில் கால்பங்கிற்குமேல் மிகுதியாகக் கற்றவனாகான். கற்கும் தொழிலாளரோடு பழகுவதன் மூலம்காற்பகுதியும் பிறருக்கு விரித்து உரைப்பதன்மூலம் அரைப்பகுதியுமாகக் குற்றமற்ற புலமை  நிரம்பும் சிறப்பாகும்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue