Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6. நல்லினஞ் சேர்தல்





தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaramதலைப்பு-நல்லினம்சேர்தல் : thalaippu_nallinamsethal_va.u.si_meyyaram

6. நல்லினஞ் சேர்தல்

  1. நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே.
நல்லவர்களின் நட்பு நன்மைகளை எல்லாம் தரும்.
  1. நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர்.
நல்லவர் என்பவர் உண்மையைச் சார்ந்து நிற்பவர்கள்.
  1. அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர்.
உண்மையைப் புரிந்து பற்றற்ற உள்ளத்துடன் இருப்பவர்கள்.
  1. தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர்.
தவத்தையும் நல்லொழுக்கத்தையும் காத்து நிற்பவர்கள் .
  1. நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர்.
நல்ல நினைப்பு, சொல், செயல் மூன்றிலும் நிலைத்து நிற்பவரே நல்லினத்தார்.
  1. உலகிய லெல்லா முணர்ந்து நிற்போர்.
உலகத்தின் இயல்பை உணர்ந்து நிற்பவர்கள்.
57.அறனோ பொருளோ வாக்கி நிற்போர்.
அறத்தையும் பொருளையும் படைப்பவர்கள்.
  1. பசுவினைப் பயன்பதி பயக்கு மென்போர்.
நமது செயல்களின் பயனை நமக்கு அளிப்பது இறைவன் என்று கூறுபவர்கள்.
  1. இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர்.
இதைப் போன்ற குணங்களை உடையவர்களுடன் நட்பு கொண்டிருப்பவர்கள் ஆகியோர் தீயவர்கள் ஆவர்.
  1. தினமு நல்லினந் தெரிந்துசேர்ந் திடுக.
நல்லவர்களைத் தேர்ந்து எடுத்து எப்பொழுதும் அவர்களுடன் இணைந்து இருக்க வேண்டும்.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarumவ.உ.சிதம்பரனார்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue