Skip to main content

மாசிலாக்கருவூலம் – காவிரிமைந்தன்





தலைப்பு-மாசிலாக்கருவூலம்,காவிரிமைந்தன் : thalaippu_maasilaakaruvulam_kavirimainthan

மானுடம் முழுமைக்கான மாசிலாக்கருவூலம்

இட்டது ஈரடிகூட இல்லை! இருப்பினும்
தொட்டது வான்புகழ் என்றார்!
சொற்களில் சுருக்கம் வைத்து
பொருள்தனின் பரப்பை நீட்டும்
வையத்தின் பொதுமறை தந்த – திரு
வள்ளுவன் புகழ்தான் என்ன?
பாலென மூன்றைப் பிரித்து – அதி
காரங்கள் நூற்று முப்பத்து மூன்றெனக்கண்டு
உலகம் வழக்கத்தில் கொண்டு உள்ள
தலைப்புகள்தனிலே குறள்கள் பத்து
வாழைதான் குலைதான் தள்ளி
வைத்ததைப் போல அழகு
வழிவழி வந்தவரெல்லாம்
வாசித்து மகிழமட்டுமின்றி..
வழியாய் பூசித்து ஏற்கவைத்தார்
வாசுகி கணவர் அன்றோ?
ஆக்கமும் ஊக்கமும் அங்கே
பாக்களாய் பரவிக்கிடக்க
சூட்சுமம் ஏதுமின்றி.. தமிழ்ச்
சுவையிலும் குறையே இல்லை!
அறவழி நூலிது என்கிற வரையறை
ஏதுமின்றி முழுமையாய் வாழ்வின் எல்லை
மூன்றாம்பாலுடன் தந்துவைத்தானே!
பேதங்கள் எவையுமின்றி எழுதிய – திருக்
குறள்தான் இங்கே தமிழ்மறை வேதமென்போம்!
மானுடம் முழுமைக்கான மாசிலாக் கருவூலமாகும்!
kaviri-mainthan01
  • காவிரிமைந்தன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue