Skip to main content

இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி! –இரா. இரவி




தலைப்பு-இலக்கண இலக்கியக்குவியல் - thalaippu_ilakkanailakkiyangalinkuviyal_thamizh

‌இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி
உலகப் பொதுமறையை உலகிற்குத் தந்திட்ட தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி
எண்ணிலடங்காச் சொற்கள் கொண்ட தமிழ்மொழி
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி
பழமைக்குப் பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி
புதுமைக்குப் புதுமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி
இணையில்லாப் புகழ்மிக்க உயர்தனித் தமிழ்மொழி
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி
உலகிற்குப் பண்பாட்டைப் பறைசாற்றும் தமிழ்மொழி
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி
அறிஞர்கள் பலரைச் செதுக்கிய தமிழ்மொழி
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி
அற்புத உறவுகளுக்குத் தனித்தனிச் சொல்லழகு தமிழ்மொழி
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி
மனத்தை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி
ஓர் எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி
ஓர் எழுத்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி
காந்தியடிகள் மனமாரப் புகழ்ந்திட்ட தமிழ்மொழி
தமிழனாகப் பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி
உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி!
இரா. இரவி, மதுரை.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue