Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – 085. புல்அறிவு ஆண்மை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 084. பேதைமை தொடர்ச்சி)

attai_kuralarusolurai03

02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம்  085. புல்அறிவு ஆண்மை   

பேர்அறிஞர் என்று காட்டுதற்குக்
கீழ்அறிவைக் கைஆளும் அறியாமை
  1. அறி(வு)இன்மை, இன்மையுள் இன்மை; பிறி(து)இன்மை,
     இன்மைஆ வையா(து) உலகு.


   அறிவு இல்லாமையே, வறுமை;
       பிறஎலாம், வறுமைகள் அல்ல.

  1. அறி(வு)இலான் நெஞ்(சு)உவந்(து) ஈதல், பிறிதுயாதும்
   இல்லை, பெறுவான் தவம்.

     அறியான் மனம்மகிழ்ந்து தருதல்,
       பெறுவான் செய்த தவத்தால்தான்.

  1. அறி(வு)இலார், தாம்தம்மைப் பீழிக்கும் பீழை,
   செறுவார்க்கும் ஆற்றல் அரிது.

     அறிவிலி செய்துகொள்ளும் துன்பம்போல்,
       பகைவர்க்கும் செய்தல் முடியாது.

  1. வெண்மை எனப்படுவ(து) யா(து)…?எனின், “ஒண்மை
   உடையம்யாம்” என்னும் செருக்கு.
    பேரறிவு பெற்றுளோம்” என்னும்
       ஆணவமே, அறியாமை ஆகும்.
  1. கல்லாத மேற்கொண்டு ஒழுகல், கச(டு)அற
   வல்லதூஉம் ஐயம் தரும்.
     கல்லாததைக் கற்றதுபோல் காட்டினால்,
       கற்றதிலும் ஐயமே கொள்வார்.

  1. அற்றம் மறைத்தலோ புல்அறிவு, தம்வயின்
     குற்றம் மறையா வழி.
     குற்றத்தை நீக்காமல், மானத்தை
       மறைக்க உடுத்தல், இழிஅறிவு.

  1. அருமறை சோரும் அறி(வு)இலான், செய்யும்
   பெருமிறை, தானே தனக்கு.
    மறைவுச் செய்திகளை வெளியிடுவான்,
       தனக்குத் தானே துன்பம்தான்.

  1. ஏவவும் செய்கலான், தான்தேறான், அவ்உயிர்
   போஒம் அளவும்ஓர் நோய்.

     ஏவினாலும் செய்யான், தானும்
       அறியான், சாகும்வரை நோய்தான்.

  1. காணாதான் காட்டுவான் தான்காணான்; காணாதான்
 கண்டானாம், தான்கண்ட வாறு.
     அறியானுக்கு அறிவித்தாலும், தனது
     கீழறிவே மேலறிவு என்பான்
  1. உலகத்தார்  “உண்(டு)”என்பது, “இல்”என்பான், வையத்(து)
   அலகைஆ வைக்கப் படும்.
“உண்டு”என்பதை, ”இல்லை” என்பானை,
       உலகத்தார் பேயாகவே மதிப்பார்.
பேராசிரியர் வெ. அரங்கராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue