Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 052. தெரிந்து வினை ஆடல்

(அதிகாரம் 051. தெரிந்து தெளிதல் தொடர்ச்சி)

attai_kuralarusolurai97

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல்

பணியில் அமர்த்தியபின், அவர்அவர்
திறன்கள் அறிந்து, கையாளுதல்

0511 .நன்மையும், தீமையும், நாடி, நலம்புரிந்த
     தன்மையால், ஆளப் படும்.
     நன்மை, தீமைகளை, ஆராய்க;
      நன்மையரைப் பணியில் அமர்த்துக.
  1. வாரி பெருக்கி, வளப்படுத்(து), உற்றவை
     ஆராய்வான், செய்க வினை.
 வருவாய் பெருக்கி, வளப்படுத்திப்,
பயன்கள் ஆய்வான் செயற்படுக.
  1. அன்(பு),அறிவு, தேற்றம், அவாஇன்மை, இந்நான்கும்,
      நன்(கு)உடையான் கட்டே, தெளிவு.
      அன்பன், அறிவன், தெளிவுஉளன்,
     பேராசைஇலான், பணிக்கு உரியான்.
  1. எனைவகையான், தேறியக் கண்ணும், வினைவகையான்,
      வே(று)ஆகும் மாந்தர், பலர்.
     எப்படித்தான் தெளிந்தாலும், செய்முறையில்
      வேறாக நடப்பாரே பலர்.
  1. அறிந்(து)ஆற்றிச், செய்கிற்பாற்(கு) அல்லால், வினைதான்
      சிறந்தான்,என்(று), ஏவல்பாற்(று) அன்று.
 தகுபணியாரை ஏவுக; வேறு
பணியில் சிறந்தானை ஏவாதே.
  1. செய்வானை நாடி, வினைநாடிக், காலத்தோ(டு)
      எய்த, உணர்ந்து செயல்.
 செய்திறத்தானையும், செயலையும் ஆய்ந்து
காலத்தோடு பொருந்தச் செய்.
  1. இதனை, இதனால், இவன்முடிக்கும், என்(று),ஆய்ந்(து),
     அதனை, அவன்கண், விடல்.
 “இச்செயலை, இம்முறையால் இவனே
 முடிப்பான்” என்றுஆய்ந்து, பணிஅமர்த்து.
  1. வினைக்(கு)உரிமை நாடிய பின்றை, அவனை,
     அதற்(கு)உரியன் ஆகச் செயல்.
     பணிக்கு உரியானைத் தேர்ந்தபின்,
     அப்பணியை, அவனிடமே விடு.
  1. வினைக்கண் வினைஉடையான் கேண்மைவே(று) ஆக
     நினைப்பானை, நீங்கும் திரு.
    ஆர்வத்தோடு செய்வான்மீது ஐயம்,
     கொள்வான், செல்வத்தையும் இழப்பான்.

0520 .நாள்தோறும், நாடுக மன்னன்; வினைசெய்வான்,
     கோடாமை கோடா(து), உலகு.
     நாள்தோறும், பணியாளனை ஆய்ந்தால்,
      நாடும், பணியும் கோணாஆம்.
  • பேராசிரியர் வெ. அரங்கராசன்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue