Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 041. கல்லாமை




 arusolcurai_attai+arangarasan

02. பொருள் பால் 
05. அரசு இயல்   
அதிகாரம் 041. கல்லாமை

          கல்விஅறிவு இல்லாமையால் உண்டாகும்,
             பல்வகைத் தீமைகளும், இழிவுகளும்.

  1. அரங்(கு)இன்றி, வட்(டு)ஆடி அற்றே, நிரம்பிய
      நூல்இன்றிக், கோட்டி கொளல்.

நூல்அறிவு இல்லாது பேசுதல்,
அரங்குஇல்லாது சூதுஆடல் போல்.

  1. கல்லாதான், சொல்காம் உறுதல், முலைஇரண்டும்
     இல்லாதாள், பெண்காம்உற்(று) அற்று.

 கல்லான் பேசவிரும்புதல், மார்பகம்
இல்லாதாள் பெண்மை விரும்பல்போல்.

  1. கல்லா தவரும், நனிநல்லர், கற்றார்முன்,
      சொல்லா(து) இருக்கப் பெறின்

கற்றார்முன் பேசாது இருக்கும்
கல்லாரும், மிகவும் நல்லாரே.

  1. கல்லாதான் ஒட்பம், கழிய நன்(று)ஆயினும்,
     கொள்ளார், அறி(வு)உடை யார்

கல்லான் தீடீர்அறிவு, மிகநல்லதே
ஆயினும், அறிவார் கொள்ளார்.

  1. கல்லா ஒருவன் தகைமை, தலைப்பெய்து,
     சொல்ஆடச், சோர்வு தரும்.

 கல்லான்தன் அறிவுத்தகுதி, உடன்கலந்து
உரையாடச், சோர்வைத் தரும்.

  1. ”உளர்”என்னும், மாத்திரையர் அல்லால், பயவாக்
      களர்அனையர், கல்லா தவர்.

இருக்கிறார்” என்பதைத் தவிரக்,
கல்லார், விளையாக் களர்நிலமே.

  1. நுண்மாண் நுழைபுலம், இல்லான் எழில்நலம்.
      மண்மாண் புனைபாவை அற்று.

நுட்பமான கூரிய அறிவுஅது
இல்லாதான், மண்பொம்மைக்கு ஒப்பு.

  1. நல்லார்கண் பட்ட வறுமையின், இன்னாதே,
     கல்லார்கண் பட்ட திரு.

கல்வி நல்லார்தம் ஏழ்மையைவிடக்,
கல்லார்தம் செல்வம், மிகக்கொடிது.

  1. மேல்பிறந்தார் ஆயினும், கல்லாதார், கீழ்ப்பிறந்தும்,
     கற்றார் அனைத்(து)இலர் பாடு.

படிக்காத மேலார் பிறப்பைவிடப்
படித்தார் கீழ்ப்பிறப்பே, மேல்பிறப்பு.

  1. விலங்கொடு, மக்கள் அனையர்; இலங்குநூல்
      கற்றாரோ(டு), ஏனை யவர்.

 அறநூல்கள் படித்தார், மக்கள்;
படியார், விலங்குகள் போல்வார்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue