திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 029. கள்ளாமை


arusolcurai_attai+arangarasan

01. அறத்துப் பால்

03. துறவற இயல்

அதிகாரம் 029. கள்ளாமை

உள்ளத்தாலும், பிறரது பொருள்களை
எள்அளவும் திருட எண்ணாமை.

  1. எள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்(து)ஒன்றும்,
     கள்ளாமை காக்க,தன் நெஞ்சு.

  இகழ்ச்சியை விரும்பாதான், எந்த
       ஒன்றையும் திருட எண்ணான்.

  1. உள்ளத்தால் உள்ளலும் தீதே, “பிறன்பொருளைக்,
   கள்ளத்தால் கள்வேம்” எனல்.

      பிறரது பொருளைத் திருடுவோம்”
       என்று, நினைப்பதும் திருட்டே..

  1. களவினால் ஆகிய ஆக்கம், அள(வு)இறந்(து)
   ஆவது போலக் கெடும்.

  திருட்டுச் செல்வம், பெருகுதல்போல்
       தோன்றினாலும், விரைவில் அழியும்.

  1. களவின்கண் கன்றிய காதல், விளைவின்கண்,
    வீயா விழுமம் தரும்.

  திருட்டின்மேல் தீராத காதல்
       இறுதியில், தீராத துயரமே.

  1. அருள்கருதி, அன்(பு)உடையர் ஆதல், பொருள்கருதிப்,
   பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

       தந்நிலை மறந்தாரிடம் திருட
       எண்ணுவாரிடம் அன்புஅருள் இரா.

  1. அளவின்கண் நின்(று)ஒழுகல் ஆற்றார், களவின்கண்
     கன்றிய காத லவர்.

  களவை ஆழ்ந்து காதலிப்பார்க்[கு]
       அளவோடு நிற்க முடியாது

  1. கள(வு)என்னும் கார்அறி(வு) ஆண்மை, அள(வு)என்னும்
     ஆற்றல் புரிந்தார்கண் இல்.

  அள[வு]அது அறிந்தாரிடம் கள[வு]எனும்
       தீய அறிவும், இருக்காது.

  1. அள(வு)அறிந்தார் நெஞ்சத்(து), அறம்போல் நிற்கும்,
     கள(வு)அறிந்தார் நெஞ்சில் கரவு.

  அளவாளியிடம் நிற்கும் அறம்போல்,
       களவாளியிடம் வஞ்சம் நிற்கும்.

  1. அள(வு)அல்ல செய்(து),ஆங்கே வீவர், கள(வு)அல்ல,
     மற்றைய தேற்றா தவர்.

  களவைத் தொடர்வார், அள[வு]இன்றிக்
       களவாடி, அப்போதே அழிவார்.

  1. கள்வார்க்குத் தள்ளும், உயிர்நிலை; கள்ளார்க்குத்
     தள்ளாது, புத்தேள் உலகு.

  கள்வர், விரைந்து அழிவர்;
       கள்ளார், தேவர்உலகு புகுவர்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 030. வாய்மை)  

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue