Posts

Showing posts from July, 2015

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 010. இனியவை கூறல்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      26 July 2015       No Comment (அதிகாரம் 009. விருந்து ஓம்பல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்   அதிகாரம் 010. இனியவை கூறல்        கேட்பவர் மனமும் மகிழும்படி,        இனியநல் சொற்களைக் கூறுதல். இன்சொலால், ஈரம் அளைஇப், படி(று)இலஆம்,      செம்பொருள் கண்டார்,வாய்ச் சொல்.          இரக்க[ம்உ]ள்ள, பொய்இல்லா இன்சொல், அறத்தை ஆராய்ந்தார் வாய்ச்சொல். அகன்அமர்ந்(து), ஈதலின் நன்றே, முகன்அமர்ந்(து),      இன்சொலன் ஆகப் பெறின்.      மனம்மகிழ்ந்து ஈதலைவிட, முகம்மலர்ந்து        இன்சொல் சொல்லல் நன்று. முகத்தான் அமர்ந்(து),இனிது நோக்கி, அகத்தான்ஆம்,    இன்சொ லினதே அறம்.        முகமலர்ச்சியோடு பார்த்து, மனத்தால்        இன்சொல் சொல்லலே அறம். துன்(பு)உறூஉம் துவ்வாமை, இல்ஆகும், யார்மாட்டும்,      இன்(பு)உறூஉம் இன்சொல் அவர்க்கு.        இன்பந்தரும் இன்சொல் சொல்வார்க்குத்      துன்பந்தரும் வறுமையே இல்லை. பணி(வு)உடையன், இன்சொலன் ஆதல், ஒருவற்(கு)    அணிஅல்ல, மற்றுப் பிற.  

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 009. விருந்து ஓம்பல்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      26 July 2015       No Comment (அதிகாரம் 008. அன்பு உடைமை  தொடர்ச்சி) 01. அறத்துப் பால்   02. இல்லற இயல் அதிகாரம் 009. விருந்து ஓம்பல்        உறுபசியுடன் வருகின்ற எவருக்கும்,         விருந்து படைத்தலும் உதவுதலும். இருந்(து)ஓம்பி, இல்வாழ்வ(து) எல்லாம், விருந்(து)ஓம்பி,      வேள்ஆண்மை செய்தல் பொருட்டு.        இல்வாழ்தல், விருந்தினரைக் காக்கவும்,        நல்உதவி செய்யவுமே ஆகும். விருந்து புறத்த(து)ஆத், தான்உண்டல், சாவா      மருந்(து)எனினும், வேண்டல்பாற்(று) அன்று.         விருந்தாளர் வெளியில் ; சாவினை        நீக்கும் மருந்[து]எனினும் அருந்தாதே. வருவிருந்து, வைகலும், ஓம்புவான் வாழ்க்கை,      பருவந்து, பாழ்படுதல் இன்று.          நாள்தோறும் விருந்து தருவார்தம்        வாழ்வு, துன்பப்படாது ; பாழ்படாது. அகன்அமர்ந்து, செய்யாள் உறையும், முகன்அமர்ந்து,    நல்விருந்(து) ஓம்புவான் இல்.        முகம்மலர விருந்து தருவார்        வீட்டில், திருமகள் தங்குவாள். வித்தும், இடல்வ

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 008. அன்பு உடைமை

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      26 July 2015       No Comment (அதிகாரம் 007. மக்கள் பேறு தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்       அதிகாரம் 008. அன்பு உடைமை      உள்ளம் உள்நெகிழ்ந்து, கனியும்படி    உயிர்வளர்க்கும் ஒழுக்கம்; உயர்வழக்கம்.  அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்….? ஆர்வலர்    புன்கண்நீர், பூசல் தரும்.        அன்பை அடைக்கும் கதவுஇல்லை;      அன்பைக் கண்ணீரே , காட்டிவிடும்.  அன்பு(இ)லார் எல்லாம், தமக்(கு)உரியர்; அன்(பு)உடையார்,    என்பும் உரியர் பிறர்க்கு.          அன்[பு]இல்லார், தந்நலத்தார்; அன்[பு]உள்ளார்,        உயிரையும் கொடுக்க வல்லார். “அன்போ(டு) இயைந்த வழக்(கு)”என்ப, ஆர்உயிர்க்(கு)     என்போ(டு) இயைந்த தொடர்பு.        உயிர்க்கும், உடம்புக்கும் இடைத்தொடர்பே,        அன்புக்கும், வாழ்வுக்கும் உள்ளது.  அன்(பு)ஈனும், ஆர்வம் உடைமை; அதுஈனும்,    நண்(பு)என்னும் நாடாச் சிறப்பு.          அன்பால் ஆர்வமும், ஆர்வத்தால்       தேடா நட்புச்சிறப்பும் தேடிவரும் .  “அன்(பு)உற்(