Posts

Showing posts from June, 2015

திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் – வெ.அரங்கராசன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      28 June 2015   1 1.0 . நுழைவாயில்                 எல்லார்க்கும் எல்லாமும் [0582] சொல்ல வேண்டியவற்றை நல்ல வகையில்- வெல்லும் வகையில் சொல்லும் சொல்லாற்றல் மிக்கவர் அருந்திறல் பெருந்தகையர் திருவள்ளுவர். தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் சொல்ல வேண்டிய இன்றியமையா அனைத்தையும் சொல்லியுள்ளார். அவற்றுள் ஒரு தலைப்பே உலகு தழீஇய பொதுமைச் சிறப்பு மிக்க தலைப்பாகிய ‘வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள்’ என்பது. இத் தலைப்பும், திருவள்ளுவர் எத்துணைப் பெரிய பெருமையும் அருமையும் பொலியும் தொலைநோக்குப் பார்வையர் என்பதைப் புலப்படுத்தும். இனி அவை பற்றி நீடு நினைந்து ஆழச் சிந்திப்பது இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கு. 2.0. பொருளின் இன்றியமையாமை                 நீர்இன்றி அமையாது உலகு [0120] என்பது போலப், பொருள்இன்றி அமையாது உலகு. பொருள் இல்லார்க்கு இவ்உலகு இல் [0247] என்பதும் திருவள்ளுவரின் பெருவாக்கு. பொருளின் இன்றியமையாமையைத் தொலைநோக்கால் நனிஉணர்ந்த திருவள்ளுவர் பொருள் செயல் வகை [076] என்னும் அதிகாரத்தைப் பொருள்பொதி

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 1: மறைமலை இலக்குவனார்

Image
மறைமலை இலக்குவனார்      28 June 2015       No Comment   1 கட்டுரையின் நோக்கம்:   கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தராக விளங்கிய சங்கத் தமிழர், தம்மைச் சுற்றியும் ஒலிக்கும் ஒலிகளையறிந்து அவ்வொலிகளின் வழித் தம் இயக்கத்தை அமைத்துக்கொண்டனர்.   வளியின் போக்கையறிந்து நீரில் கலன்களைச் செலுத்தும் முறைமையையறிந்த தமிழர்,நிலத்தில் தம்மைச் சூழ்ந்தமையும் ஒலிகளின் மாறுபாடுகளை வகைப்படுத்தியறிந்து ஊறு நேர வாய்ப்புள்ள வழிகளைத் தவிர்த்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றிருந்தனர். இனிய ஓசைகளைச் செவியாரத் துய்த்தும் இன்னா ஓசைகளை இனங்கண்டு பிறர்க்குரைத்தும் ஒலிகளை ஒப்புநோக்கிக் கூறியும் தம்மைச் சூழ்ந்திருந்த ஒலிச்சூழலமைவை அவர்கள் ஆய்ந்துரைத்த திறம் இக் கட்டுரைக்குத் தூண்டுகோலாக அமைந்தது.ஒலிகளையும் பேரொலிகளையும் சங்கச் சான்றோர் தமது பாடல்களில் பதிவுசெய்த பாங்கினையும் அவர்கள் விளக்கிய ஒலிவகைமைகளையும் தொகுத்துரைத்தலே இக் கட்டுரையின் நோக்கமாகும்.. ஒலிச்சூழலமைவு-தேவையும் நோக்கமும்:   மனிதன், தன்னைச் சூழ்ந்துவிளங்கும் உயிரினங்களையும் பயிரினங்களையும்