Posts

Showing posts from April, 2015

தமிழ்பேசி நாடுக நாளும் நயம் – சந்தர் சுப்பிரமணியன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      26 April 2015       No Comment தமிழ் அந்தாதி இனிக்கும் விருந்தாகி இன்சுவைத் தேனாய் கனிக்குள் அமுதாய் கவியாய் – மனத்திடை ஆடிடும் காரிகையாய் ஆகும் தமிழ்பேசி நாடுக நாளும் நயம் (01) நயமாய் சொற்புனைந்து நல்கி விருத்த மயமாய் விளைவித்தான் விந்தை – அயமென வீழும்நம் கம்பன்தன் பாடல், தமிழ்ச்சுவை வாழப் பிறந்த வளம் (02) (அயம் – சுனை) வளமாய்த் தமிழ்பேசி, வார்த்தைகொண்(டு) ஆட்டக் களத்தே களித்தாடு; காணும் வளத்தால் பயின்று தமிழ்நன்கு பாநூறு பாடி முயன்றுயர்வாய் மேலே முனைந்து (03) முனைந்தவன் நெய்தமுழு வேதக் குறிஞ்சி புனைந்தவள் கொண்டாள் பெருமை – குணங்கொள சொல்லில் மருதென முப்பாலைக் கண்டதுமே முல்லைச் சிரிப்பாய் முகம் (04) வேதக்குறிஞ்சி – அரிதிற் கிடைத்த படைப்பு (உருவகம்) மருது – மருந்து (ஐவகை நிலமும் வருமாறு எழுதப்பட்ட பாடல்) முகத்திலக வாசனையாம் மூவிதமாம் எங்கும் புகழ்மணக்கும் ஓரணங்காம் பாரில் – மிகப்பல சீர்கொள் மொழியாம் சினந்திடின் சீறிடும் கூர்வாளாம் செந்தமிழே கூறு (05) (தமிழ்த்தாய் வாழ்த்தை தழுவியது) கூறாயோர் நூறுவண்ணம் கொண்டும் குர

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 3

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      26 April 2015       No Comment ( சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி)   காட்சி மூன்று துறவகத்தில் இலவா, குசா இரட்டையர் பிறப்பு  இடம்: வால்மீகி முனிவரின் துறவகம். நேரம்: மாலை அரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதையை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார்.  பெண்சீடர்கள்: மகரிசி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது. பார்த்தால் பெரிய வீட்டைச் சேர்ந்தவர்போல் தெரிகிறது. யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே சிறிது காலம் தங்க வைக்கலாமா ? அவருக்கு இப்போது யாருமில்லை! ஆனால் அவரது கணவர் சிறிது காலம் கழித்து அழைத்துச் செல்ல இங்கு வருவாராம்.  வால்மீகி: (சற்று உற்று நோக்கி) …. எனக்குத் தெரியும் இந்த மாது யாரென்று! கோசல நாட்டுப் பேரரசி சீதாதேவி. மாமன்னர் இராமனின் தருமப்பத்தினி. மிதிலை நாட்டு மன்னரின் மூத்த புத்திரி

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 21 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      26 April 2015       No Comment ( சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி) ஆ.வெ.முல்லைநிலவழகன் காட்சி – 21 (நாடகக்காட்சி – 7) அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (அருண்மொழி பாடலைக் கேட்ட பூங்குயில் அன்புக் கணவனை ஐயம் கொள்ள திருவளர்ச் செல்வனோ திருத்தியதோடு இன்பத்தைப் பொழியவும் செய்கிறான் ஆங்கே) அரு       :      பொழிபிறை நனி நெற்றி! தோழி!                                                                 எழில் இதழ் கனிக்கொவ்வை! தோழி! வழிகின்ற குழல் அருவி! தோழி! பொழிகின்ற வாய் அமுதம்! தோழி! விழி இரு ஒளி வைரம்! தோழி! அழிவில்லாக்கனி இதுவாம் தோழி! மொழி அரிச் சுவடியிலே! காதல்! வழிதனி வைத்துவிட்டேன்! வான் விடி நிற மேனி! தோழி! வெண்முல்லைப் பல்வரிசை! தோழி! தேன் கனிக் கவிகன்னம்! தோழி! பூஞ்சுமை உடல் கொடியாம்? தோழி! வான் மதிமுகம் என்றான்! தோழி! இளந்தண்டு கை எனக்காம்! தோழி! தேன் வெள்ளச் சொல்லாலே! தோழி! மயிலென அணைத்து விட்டான்! வி