Skip to main content

வாழ்ந்து தழை – அரியரவேலன்

வாழ்ந்து தழை – அரியரவேலன்

52ariaravelan01
52kavithai_vaazhthuthazhai_padam
வாழ்ந்து தழை – அரியரவேலன்
புள்ளல்லவே? – நீ
புழுவல்லவே? – பின்
புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்?
கல்லல்லவே? – நீ
கசடல்லவே? – பின்
கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்?
மண்ணல்லவே? – நீ
மரமல்லவே? – பின்
மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்?
விழலல்லவே? – நீ
வெற்றல்லவே? – பின்
வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்?
கண்ணைத் திற! – கீழ்
விண்ணை அறி! – இரு
கைகளை ஏனினும் கட்டுகிறாய்?
கூட்டை உடை! – சங்கை
ஊதி எழு! – சேவல்
கூவிய பின்னுமேன் தூங்குகிறாய்?
அச்சம் அறு! – தலை
வணங்க மறு! – பழம்
ஆண்டையைக் கண்டேன் மருளுகிறாய்?
அழுகை விடு! – தாழ்
வகத்தை ஒழி! – விதிச்
சகதியில் ஏனினும் பிறழுகிறாய்?
இலக்கை அமை! – அதை
எட்ட முனை! – அதில்
இடைவரும் தடைகளைத் தாண்டவிழை!
தொடர்ந்து முயல்! – தோன்றும்
துயரம் களை! – உன்றன்
தோள்வலி நன்கு துலங்கஉழை!
விளையும் பயன்! – பகிர்வில்
வேண்டும் சமன்! – அதை
வென்றிடத் தோழமை மறுத்தல்பிழை!
ஒப்பை அழை! – மனம்
ஒன்றி உழை! – இந்த
உலகம் பொதுவென வாழ்ந்துதழை!
காக்கைச் சிறகினிலே – சனவரி 2013 – பக்.32-33
தரவு : புலி உறுமுது
pirar-karuvuulam



அகரமுதல52


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue