Posts

Showing posts from November, 2014

செஞ்சீனா சென்றுவந்தேன் 22 – பொறி.க.அருணபாரதி

Image
செஞ்சீனா சென்றுவந்தேன் 22  பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன்      23 நவம்பர் 2014       கருத்திற்காக.. 22. மக்கள் சீனத்தின் எதிர்காலம்?   இறுதியாக, நான் தாயகம் திரும்ப வேண்டிய நாள் வந்தது. சீனாவின் இன்றைய நிலை குறித்து அசைபோட்டேன். இன்றைய சீனாவின் நிறைகுறைகள் அனைத்தும், நாளை அமையவிருக்கும் தமிழ்த் தேசத்திற்கு படிப்பினைகாக விளங்கக்கூடியவை.   எதிர்காலத்தில், பொதுவுடைமைக் கட்சியின் ஒருகட்சி முற்றதிகாரம் நிலவும் சீனாவில், இப்பொழுது நிலவுவதை விட அதற்கெதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும். அப்பொழுது, சீனாவின் ஒருகட்சி முற்றதிகாரம் வீழ்ந்து நொறுங்கும். உண்மையில், சீனப் பொருளியலை விழுங்கிவிட்ட (கபளீகரம் செய்துவிட்ட) மேற்குலக முதலாளிய நாடுகள், அந்த ஒருகட்சி முற்றதிகார வீழ்ச்சியை ஒட்டுமொத்த பொதுவுடைமை வீழ்ச்சியாகவே கொண்டாடுவார்கள். அதுதான் அவர்களுக்குத் தேவையும்! ஒருவேளை, மாவோ காலத்தைப் போல சீன உழைக்கும் மக்கள் மீண்டும் வல்லாளுமைக் கொள்ளைகளுக்கு எதிராகத் திரண்டெழுந்தால், ”சீன மக்கள் குடியரசு” உண்மையான மக்கள் குடியரசாகும். இல்லெயெனில், அடுத்த வட அமெரி

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்

Image
சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம் இலக்குவனார் திருவள்ளுவன்      23 நவம்பர் 2014       கருத்திற்காக..   மையக்கருத்துரை முன்னுரை    சங்க இலக்கியத்தில் சூழ் என்ற வினை   சூழ்ந்திருத்தல் (surrounding),   படர்தல் (spreading), ஆராய்தல் (deliberation), கருதுதல் (intention),   ஆலோசித்தல் (consultation) என்று ஒருசொல்பலபொருளாகப் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது (அகநானூறு , பார்க்க, சுப்பிரமணியன் 1972) . சூழல் என்ற தொழில்பெயர்   பரிபாடலில் (‘புடை வரு சூழல்’ 19. 20 ௦) பயின்றுள்ளது. ‘சுற்றமாச் சூழ்ந்துவிடும்’ (475) என்பது திருக்குறள் வழக்கு. இங்குச் சூழ்ந்திருத்தல் என்ற பொருளே பொருந்தும். அது பல பொருள் ஒரு சொல்லாக இருப்பதால், சுற்றுச்சூழல் என்று புதிதாக ஒரு தொடர் இந்த நூற்றாண்டில் உண்டாக்கப்பட்டுள்ளது.         மனித வாழ்வு பிறரையும்   பிற பொருள்களையும் சூழ்ந்த வாழ்வாக அமைந்துள்ளது என்பது ஒரு உண்மை. அந்தச் சூழலை இரண்டு பெரும் பிரிவாகப் பகுக்கலாம்:1. குடும்பச் சூழல், சமூகச் சூழல், நாட்டுச் சூழல், வரலாற்றுச் சூழல், அரசியல் -பண்பாட்டுச் சூழல் என்

தமிழே வாழ்க! – ஆ. வெ. முல்லை நிலவழகன்

Image
தமிழே வாழ்க! – ஆ. வெ. முல்லை நிலவழகன் இலக்குவனார் திருவள்ளுவன்      23 நவம்பர் 2014       கருத்திற்காக.. ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்றே முழங்கிய தமிழே வாழ்க! நாடும் மொழியும் தாயயன எம்மை! வணங்கிடச் சொன்ன தமிழே வாழ்க! அன்பே தெய்வம்! அறமே கோவில்! நன்றே சொல்லிய தமிழே வாழ்க! வீரமும் அறமும் உயிரெனச் சொல்லி! நெறிமுறை வகுத்த தமிழே வாழ்க! வறுமையில் இருந்தும் விருந்திடச் சொன்ன! பண்பிற் சிறந்த தமிழே வாழ்க! தீமைகள் செய்தால் நன்மைகள் செய்தே! திருத்திடச் சொன்ன தமிழே வாழ்க! அரசுக் கட்டிலில் புலவன் துயின்றும்! மன்னவன் மகிழ்ந்த தமிழே வாழ்க! ஓளவைக்கு நெல்லிக்கனியினைக் கொடுத்து! மன்னவன் மகிழ்ந்த தமிழே வாழ்க! - தமிழ்மாமணி ஆ. வெ. முல்லை நிலவழகன்   தலைவர், வானளாவிய தமிழ்பேரவை 6,வள்ளுவர் தெரு, தூவாக்குடி திருச்சிராப்பள்ளி 620 015 பேசி 99429 20141 அகரமுதல 54