செஞ்சீனா சென்றுவந்தேன் 9 – பொறி.க.அருணபாரதி



செஞ்சீனா சென்றுவந்தேன் 9 – பொறி.க.அருணபாரதி

 

40-chenggong-unoccuppiedapartments

8. கோலொச்சும் மனை வணிகமும் வாழ்விழந்த வேளாண்மையும்

சோழிங்கநல்லூர் – சிறுஞ்சேரி – செம்மஞ்சேரி எனப் பல பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள சென்னையில், எப்படி மனை வணிகத் தொழில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதே போலவே தகவல் தொழில்நுட்ப நகரங்கள் குவிந்துள்ள சியான் நகரில் மனை வணிகத் தொழிலே கொடிகட்டிப் பறக்கிறது.
பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்துகின்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அங்கொரு புதிய வகை சீன YUM! wear 309மக்களை உருவாக்கியிருக்கின்றன. உலகமய நுகர்வியம் வடித்தெடுக்கின்ற புதியவகை சீனர்கள்mcdonalds01 அவர்கள்! அம்மக்கள், சீன மக்களின் பரம்பரை உணவு வகைகளை உண்பதில்லை. கெண்டகி வறுத்தகோழியகம் (Kentucky Fried Chicken – KFC)அல்லது மக்டொனால்டு(McDonald) விரைவுஉணவகங்களில் சாப்பிடுகிறார்கள். சீனர்களின் பரம்பரை வீடுகளையும், பழக்க வழக்கங்களையும் வெறுப்பதை தமது இயல்பாகவும் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். பொருள் வாங்கிக் குவிப்பதை தமது இலக்காகக் கொள்கின்றனர்.
சமூகத்திற்கு நலன் பயக்கும் ஒரு புதிய மனிதனை உருவாக்காத சமவுடைமையியம்(சோசலிசம்) தோல்வி அடைந்ததாகக் கருதப்பட வேண்டும் என்றார், புரட்சியாளர் சேகுவேரா. இந்நோக்கில் அணுகினால், சீனப் பொதுவுடைமைக் கட்சி முன்வைத்த சமவுடைமையியம்(சோசலிசம்) தோல்வி அடைந்துவிட்டதாகவே நாம் முடிவுக்கு வர வேண்டும்.
சில காலமே ஆதிக்கம் செலுத்துகிற முதலாளிய நிறுவனங்கள் ஒரு புதிய வகை சீனரை அந்த மண்ணிலே படைத்திருக்கின்றன எனில், சீனப் பொதுவுடைமைக் கட்சி ஏன் ஒரு புதியவகைப்பட்ட சமவுடைமையிய(சோசலிச) மனிதனைத் தோற்றுவிக்கவில்லை? என்ற கேள்வி நம்மை ஆட்கொள்கிறது.
குறைந்தஅளவு 10 மாடி முதல், அதிக அளவாக 25 மாடி வரையில் கட்டப்பட்ட பல அடுக்குமாடியில் தான் இந்த “நவீனச்” சீனர்கள் வசித்து வருகின்றனர். இந்நகரத்தின் அதிகஅளவு வெப்பம் 25 பாகை என்று சொல்கிறார்கள். அஃதாவது, இயல்பான ஒரு மார்ச்சு மாத நாளில், சென்னையில் காணப்படும் காலை வெயிலின் அளவு இது! அங்கே குறைந்தஅளவு வெப்பம் 1 பாகை வரை வரும் என்கிறார்கள். நான் அங்கிருந்தவரை, குறைந்தஅளவாக 2 பாகையும் அதிகஅளவாக 5 பாகையுமே வெப்ப நிலையாக இருந்தது.
பல இடங்களில், மூடப்பட்ட ஒரு பதாகையின் கீழ், செயற்கையான முறையில் வெப்பநிலை அதிகப்படுத்தப்பட்டு காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. பல இடங்களில், சொட்டு நீர்ப்பாசனங்கள் நடக்கின்றன. சீனத் தேசிய அறிவியல் கழகம் என்ற அமைப்பு, பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு உழவர்களுக்கு வேளாண்மையில் புதுமைகளைச் செய்ய சொல்லித் தருகிறது எனக் கூறும் சீன அரசின் விளம்பரங்கள் ஆங்காங்கு காணப்பட்டன. ஆனால், உழவர்களைத்தான் சியான் நகரில் காணமுடியாது.
 strawberry01
நகருக்கு வெளியே சிறிய அளவில் வேளாண்மை நடக்குமிடங்களில், இங்குள்ள குளிருக்கு ஏற்ப செம்புற்றுப்பழம்(Strawberry) முதலான பல பழ வகைகளும், காய்கறிகளும் பயிர் செய்யப்படுகின்றன. அவையே, தினமும் சியான் நகருக்குக் கொண்டு வந்து விற்கப்படுகின்றன.
 40-beiyaihouses-01
சீனாவின் பெய்ஃகாய் (Beihai /北 海) என்ற நகரத்தில், சீனக் கட்டிடக் கலை நுணுக்கங்களுடன் பல ஆடம்பர மாளிகைகள் இருக்கின்றன. ஆனால், இந்த நகரத்தில் ஒருவர் கூட வசிப்பதில்லை. இது குறித்து, மேற்குலக ஊடகங்களில் விரிவான செய்தி வந்தது. காரணம், இந்த நகரத்திலுள்ள ஆடம்பர மாளிகைகள் அனைத்தும், சீனாவின் புதியப் பொருளாதாரக் கொள்கை உருவாக்கியுள்ள புதியப் பணக்கார வருக்கத்தினருக்குச் சொந்தமானது. அவர்கள் அனைவரும் பெய்சிங்கு போன்ற நகரங்களில் உயர்நிலைப் பணிகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர்.
 40-realestateworld
வெளிநாடுகளில் பணத்தை முதலீடு செய்ய சீனாவில் இசைவு கிடையாது என்பதால், சீனாவின் இப்புதிய நடுத்தர வருக்கத்தினர், சீனாவின் மனை வணிகத் தொழிலில் அதிக அளவில் இவ்வாறான முதலீடுகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் தமது எதிர்காலத் தேவைக்காக இந்த மாளிகைகளை வாங்கியிருந்தாலும், அதில் தற்போது குடியேற யாருமில்லை. வாடகைக்குக் அங்கு குடியேற பணம் கொடுக்கும் அளவிற்கும் யாருமில்லை. எனவே, அந்நகரங்கள் காலியாக உள்ளன.
மனை வணிகத்தின் மூலம் ஆதாயம் ஈட்டலாம் என ஊதிப்பெருக்கப்பட்ட நம்பிக்கையின் விளைவே இது! இம்மனைகளைக் கட்டிய நிறுவனங்கள் காசுபார்த்து விட்டன. ஆனால், யாருக்காக இவை கட்டப்பட்டன என்பதுதான் தெரியவில்லை! உலகமயத்தின் ‘திருவிளையாடல்’களில் இதுவும் ஒன்று!
ka.arunabharathy04
(தொடரும்)



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue