Skip to main content

உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்! – யாழ்ப் பாவாணன்

உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்! – யாழ்ப் பாவாணன்


 thamizh08
வானில் இருந்து இறங்கிய
மழையோடு வந்து வீழ்ந்தவன்
நான் அல்லன்
பெற்றவர்கள் ஈன்ற பின்னர்
தெருவெளி அங்காடியில் விற்ற
நூல்களை வேண்டிப் படித்துப் பொறுக்கிய
அறிவைப் பிறருக்கு வழங்குவதே
என் பணி!
“பிறமொழிச் சொல் அகராதி” என்ற
நூலைப் படித்துப் பொறுக்கியதில் இருந்து:
ஆங்கிலத்தில் “சுகர்ட்” என்பது
தமிழில் அரைப் பாவாடையே..!.
இந்தியில் “சோடி” என்பது
தமிழில் ‘இணை’ என்பதையே!
பாரசீக மொழியில் “லுங்கி” என்பது
தமிழில் மூட்டுவேட்டியே!
உருது மொழியில் “தமாசு” என்பது
தமிழில் வேடிக்கையே!
அரபி மொழியில் “சாமீன்” என்பது
தமிழில் ‘பிணை’ என்பதையே!
மராத்தி மொழியில் “பால்கோவா” என்பது
தமிழில் திரட்டுப்பாலையே!
தெலுங்கு மொழியில் “சட்டி” என்பது
தமிழில் கவ்வுரி(ஆண் உள்ளிடுப்பு ஆடை)யே!
அடக் கடவுளே…
நம்மவர் பேசும் தமிழிலே
எத்தனை பிறமொழிகளப்பா?
“நமது வழக்கிலுள்ள தமிழில் இருந்து
பிற மொழிகளைக் களைந்து விட்டால்
நமது புழக்கத்தில்
தூய தமிழ் இருக்குமே!”
உலகெங்கிலும் வாழும் தமிழர்களே!
நடப்புத் தமிழில் இருந்து
பிறமொழிகளைத் தூக்கியெறிந்தால்
உலகெங்கிலும் தூய தமிழ் பரவுமே!
நூல் : பிறமொழிச் சொல் அகராதி
ஆசிரியர் : எசு.சுந்தர சீனிவாசன்
பதிப்பாசிரியர் : வி.கரு.இராமநாதன்
முதற்பதிப்பு : அக்டோபர், 2005
வெளியீடு : சிறி இந்து வெளியீடு
வெளியீட்டாளர் முகவரி :-
இல:40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,
உசுமான் சாலை, அ.பெ.எண் : 1040,
தியாகராய நகர் – சென்னை 600 017.

 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue