Posts

Showing posts from February, 2014

சின்னா – கல்வியாளர் வெற்றிச்செழியன்

Image
சின்னா – கல்வியாளர் வெற்றிச்செழியன் சிறுமலையில் சிறு எறும்புப்புற்று ஒன்று இருந்தது.  அதில் சிற்றெறும்புகள் சிறு கூட்டமாய் வாழ்ந்தன.  அதில் சின்னா என்ற குட்டி எறும்புதான் சிறியது. அது ஒரு நாள் தன் சிறிய நண்பரைக் காணப் புறப்பட்டது. தன் சிறு புற்றைவிட்டு சின்னா வெளியில் வந்தது.  தன் சிறு கண்களை விரித்துப் பார்த்தது.  சிறு தூறல், சிறு புற்களில் பட்டுச் சிதறியது. வழியில் கிடந்த சிறு முள்ளை எடுத்தது.  அதில் கொசுவின் சிறிய இறகைப் பொறுத்தியது. சின்ன குடை கிடைத்தது.  தனது சிறிய முன்னங்கால்களால் அதைப் பிடித்துக் கொண்டது.  சிரித்துக் கொண்டே சிறு நடைபோட்டது சின்னா. வழியில் சில சிறு செடிகளையும் சிறு பூச்சிகளையும் கண்டது.  அவர்களுக்கு வணக்கம் சொன்னது.  ‘தன் நண்பன் சிறு கரையான் வீடு எங்கே?’ எனக் கேட்டுக் கொண்டே சென்றது. சிறிதுநேரம் ஆனது.  சிறு மழை நின்றது. சிறு காற்றடிக்கத் தொடங்கியது.  பிய்ந்து போனது சின்னாவின் சிறுகுடை.  சிறு முள் மட்டும் சின்னாவிடம் இருந்தது. அதை ஓரம் போட்டது. சுற்றும் முற்றும் தன் சின்ன குடையைத் தேடியது. சிறிது தொலைவில் ஒரு சிறிய குடில்.  சிறு ப

பொங்கல் திருநாள்- திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்

Image
பொங்கல் திருநாள்- திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் ஆண்டுப் பிறப்பில் அறுவடைத் திருவிழா! மாண்புடை மண்ணில் மக்கள் பெருவிழா! கரும்பு மஞ்சள் காய்கறி கிழங்கு விரும்பும் விளைபொருள் எல்லாம் தந்த உழவர் ஆவினம் ஒளிமிகு ஞாயிறு கழனி உழுபடைக் கருவிகள் காளை உயர்வைப் போற்ற ஊரெலாம் கூடி வயலில் வீட்டில் நாட்டில் எங்கும் புத்துயிர் பரவிட பொங்கல் திருநாள் இத்தரை யெங்கும் இன்பமே எனினும் வெற்பினை எறிந்து வீரம் விளைத்த அற்புதத் தாயின் ஆரயிர்த் திருமகன் இற்றை நாளிலும் இந்தியச் சிறையில் இருந்திட இனிக்குமோ இன்சுவைக் கரும்பும்? 00000 ஆரிருள் கவிந்த அழகிய ஈழம் போரில் சிதைந்து புழுதி படிந்திட பொங்கல் பானையில் பொங்குமோ மகிழ்வு? 00000 முள்வேலி முகாமில் அழகிய ஈழம் போரில் சிதைந்து புழுதி படிந்திட பொங்கல் பானையில் பொங்குமோ மகிழ்வு? 00000 முள்வேலி முகாமில் மூன்றரை இலக்கம் கள்ளமில் தமிழர் கலங்கும் வேளையில் எள்மூக் களவும் இல்லையே இன்பம்? 00000 முள்ளி வாய்க்கால் முற்ற மதிலை நள்ளிருள் விடியுமுன் நாசமாக்கிய ஆரிய அரக்கி ஆளும் நிலத்தில் சீரினை இழந்தபின்

நம்மாழ்வார் – திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்

Image
நம்மாழ்வார் – திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் ..  சேற்று வயலில் செம்மண் நிலத்தில் ஆற்றில் காட்டில் அணையில் மலையில் காற்றில் தோய்ந்து களமதில் காய்ந்து மாற்றம் வேண்டி மனம்மிக ஒன்றி ஊரினை நாட்டினை உழைக்கும் உழவரை பாரினை பண்டைய வாழ்வினைக் காக்க ஏரினைத் துவக்காய் எடுத்த பெரியோய்! ஆளும் அரசுகள் செய்யும் அழிம்புகள் நாளும் உழவரை நாச மாக்கிடும் கேட்டினைத் தடுக்க கீழ்த்திசை வானில் மூட்டிய நெருப்பாய் முகிழ்த்த கதிரே! உடையில் உணர்வில் உரிமை மீட்பில் தடைகள் தகர்த்திடும் தன்னல மறுப்பில் நடையால் நானிலம் நிமிர்த்தும் உழைப்பில் திண்மை நெஞ்சில் திறனில் நீயெம் அண்ணல் காந்தி! ஆசான் பெரியார்! சீரினை இழந்த செந்தமிழ் உழவரை தேரினில் ஏற்ற தெருத்தொறும் நடந்து நாட்டில் இயற்கை வேளாண் உழவை நாட்டின உழைத்த நம்மாழ் வாரே! தேட்டம் வேண்டித் தீதெலாம் புரியும் கூட்டுக் கொள்ளை கொடுங்கோல் உலகில் மக்கள் வாழ மாநிலம் செழிக்க சக்கர மெனவே தரைமேல் சுழன்று தன்னையே தந்த தனிப்பெருந் தலைவ! உன்வழி ஒழுகும் உரமுடை இளையோர் இன்னே எழுந்தனர் எழுவாய் நீயே! நன்றி : அ

“இனிமைத் தமிழில்” மை!

“இனிமைத் தமிழில்” மை! .. இனிமைத் தமிழில் இருக்கின்ற ” மை ” விகுதிக்       கனிவான மூவெழுத்துச் சொற்கள் எவையெனஎன் கருத்தாய்வில் முனைந்து பொருத்தத் தேடினேன்      திருத்தச் சொற்களைக் குருத்தாய்க் கூறுகிறேன். அண்மை யோடருமை அடிமை இம்மை இனிமை இருமை இளமை இறைமை இன்மை இலாமை யோடுஆளுமை ஆடுமை ஆண்மை ஆணுமை ஆடாமை ஆளாமை ஆணிமை ஆகாமை ஈகாமை உரிமை      உடைமை உண்மை உம்மை உவமை உறாமை ஊராமை ஊர்மை ஊதாமை      ஊதுமை ஊடாமை ஊடுமை எண்மை எளிமை எருமை எம்மை எழுமை      எலாமை ஏவாமை ஏகுமை ஒருமை ஒன்மை ஓதுமை ஓதாமை ஓடுமை      ஓர்மை ஓடாமை கடமை கடுமை கருமை கதிமை கருமை கயமை      கண்மை காய்மை காயாமை காடாமை கிழமை கீழ்மை கூடுமை கூடாமை      கூர்மை கூறாமை கூகாமை கூவாமை கொடுமை கொடாமை கெடுமை கெடாமை கெழுமை கேண்மை கேளாமை கொண்மை கொம்மை கோடுமை கோடாமை கோன்மை கோராமை குறுமை குளுமை குரிமை குடிமை குருமை கூர்மை கூடுமை       கூடாமை சிறுமை சின்மை சீர்மை சுடுமை சுடாமை சும்மை செம்மை      செழுமை சேர்மை சேராமை சேய்மை தகைமை தாய்மை திண்மை திருமை      தீய்மை தீயாமை துணைமை தேய்மை தேய

பழி வராமல் படி – பாவலர் வையவன்

Image
பழி வராமல் படி – பாவலர் வையவன் ஆய்ந்து படி அன்னைத்தமிழ் ஆய்ந்து படி அதனையும் ஆழ்ந்து படி பார்மொழியாம் தமிழ் படி பழகுதமிழ் நீ படி யார்மொழியின் நூலெனினும் பசுந்தமிழில் பாயும்படி புதைபடும் தமிழ்மடி பொலிவினைக் காணும்படி புதுப்புது நூல்கள் படி புரட்சிவர நீயும் படி புகுந்திள நெஞ்சினிலே புதுஒளி பாயும்படி புனைந்துள நூலெதையும் புரியும்படி தேடிப் படி பகுத்திடும் நால்வருணம் பாரினில் ஏன்இப்படி? பகுத்தறி வாளர்களின் பலவிதநூல் வாங்கிப் படி கலைகளில் தமிழ் படி கல்வியிலும் தமிழ் படி அலைபடும் ஆலயத்தில் ஆட்சியினில் தமிழைப் படி திருமணம் தமிழ் படி குடிபுக தமிழ் படி நறுமண மானத்தமிழ் மாண்புறவே தூக்கிப்பிடி மார்க்சுபெரி யாரைப் படி மாவோஅம் பேத்கர் படி மாவீரன் பகத்சிங் படி மருதுதிப்பு வீரம் படி பாவேந்தர் பாட்டுப் படி பாவாணர் ஆய்வு படி பாராண்ட தமிழுக்கொரு பழிவராமல் தாங்கிப்பிடி விழிகளில் தீப்பொறி வெளிப்பட நீ படி விழுந்தவர் எழுந்திடவே விளங்கிவரும் நூலைப் படி மொழிகளில் தாய்மொழி முகிழ்ந்திட நீ படி பழிசொலும் மூடர்களின் பகைமுடிக்க வாளைப்பிடி! ( பாவேந்தரின

வாழ்ந்தேதான் காட்டிடுவோம் – இளவல்

Image
வாழ்ந்தேதான் காட்டிடுவோம் – இளவல் இலக்குவனார் திருவள்ளுவன்      09 பிப்பிரவரி 2014       கருத்திற்காக.. வாழ்க்கை என்பது போராட்டம்   -  எனில் போரில் கலந்து வென்றிடுவோம் வாழ்க்கை என்பது விளையாட்டு -  ஆயின் ஆடி வாகை சூடிடுவோம் வாழ்க்கை என்பது பயணம்        -   ஆனால் இனிதே இலக்கை அடைந்திடுவோம் வாழ்க்கை என்பது கேளிக்கை  -     என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம் வாழ்க்கை என்பது கணக்கு       -  எனவே போட்டுப் பார்த்துத் தேர்ந்திடுவோம் வாழ்க்கை என்பது வரலாறு          – அதனால் செம்மைச் செயலைப் பதித்திடுவோம் வாழநாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம் எத்தனைத் தடைகள் வந்தாலும் அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம் மெல்ல மெல்ல நாம் உயர்ந்தே நல்ல வாழ்வை அடைந்திடுவோம். - அகரமுதல இதழ் 12

மண் பறித்த மானம்! -இளையவன் செயா

Image
மண் பறித்த மானம்! -இளையவன் செயா .. விடுதலையே எம்பிறப்புரிமைஅவ் வேட்கைக்குக்        கெடுதல் செய்வோரையும் கெடவைத்த வீரமிகு  நேத்தாசியைப்பெற்று  வளர்த்த       வங்கமண்  இன்று தொங்கிவிட்டதே ! மொழிஅது தாய்காத்த விழிஅந்த        விழியை அழிப்பதற்கு விழையாதீர் விழைந்ததால் தான்பெற்ற”சர்” விருதையும்        பிழையான விருதுஎனப் புறமொதுக்கி பிழைப்புக்காக ஏந்திய பித்தலாட்டத்தைக்       கழையாக  நினைத்தொடித்த  கவிஞர் பிழையில்லா  இரவீ ந்திரநாத் தாகூர்       பிறந்திட்ட மண்அதுவே வங்கமண் ! விடுதலை  வேட்கையால்  வீறுகொண்டு       கெடுதலையே  செய்யும்   கேடர்களை வெற்றிகொள்ள  வீரமுழக்கமிட்ட வீரர்கள்       வற்றிப்  போகாதமண்   வங்கமண் ! இத்தாலி  மங்கைகுமுகாய  வித்துஆகஎண்ணி       கொத்தாக  மக்களின்  கொடும்நோய்கண்டு இத்துப்போன  உடம்பை  இதமாய்க்காத்து      வித்தாகிய அன்னைதெரசா அரவணைத்தமண் ! இளமைப்  பருவம் இருபதைஎட்டிய       பழங்குடி வளர்ந்த பருவப்பெண் குழுவே   பறித்தது குமரியின்கற்பை      வழுவில்லாத் தீர்ப்பாம் வழங்கினார் ! பிர்பு

ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு

Image
ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு இலக்குவனார் திருவள்ளுவன்      09 பிப்பிரவரி 2014       கருத்திற்காக..  “தம்பி, எழுந்திரம்மா கண்ணா! நேரம் ஆகுதல்லவா?” “கொஞ்சம் பொறுங்கள் அம்மா!” “என்னப்பா இது! பாட்டுப்போட்டிக்குப்போக வேண்டுமல்லவா?  அப்பாவும் நானும், முன்பே  எழுந்து குளித்துப் புறப்பட்டு உன்னுடன் சாப்பிடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம்!. நீ, இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே!”  “இல்லையம்மா! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. போட்டிக்கு எதற்குப் போகவேண்டும்?” (அப்பா, வந்துகொண்டே) “சுடர், வழக்கமாக இந்நேரம் குளித்து முடித்து இருப்பாய்! போட்டிக்குப் போக வேண்டிய நேரத்தில் ஏன் படுத்துக் கொண்டு உள்ளாய்! எழுந்திரு! எழுந்திரு! எரிச்சல் பறந்துவிடும்!”  “நான்,போட்டிக்கு வரவில்லையப்பா!” “என்ன வரவில்லையா? நீதானே பாட வேண்டும். நாங்கள் நீ, பாடிப் பரிசு வாங்குவதைப் பார்க்கத்தானே வருகிறோம்!” “அப்பா! அங்கே  கூடப்படிப்பவர்கள்  எல்லாம் வருவார்கள்.”  “வரத்தானே செய்வார்கள். அவர்கள் முன்னிலையில் பாடிப் பரிசு பெற்றால்தானே உனக்குப் பெருமை.” “அவர்கள்

அகரமுதல:சிறுகதை: நீதான் கண்ணே அழகு! – அன்பு akaramuthala: story by anbu

Image
நீதான் கண்ணே அழகு! – அன்பு இலக்குவனார் திருவள்ளுவன்      29 திசம்பர் 2013       கருத்திற்காக..   அம்மா!    நான் ஏம்மா அழகாய் இல்லை! யாரம்மா சொன்னது அப்படி? நீ அழகுதானே! போங்கம்மா! நான் சிவப்பாகவே இல்லையே! சிவப்பு நிறம் அழகு என்று யாரம்மா உன்னிடம் சொன்னது? எல்லா நிறமும் அழகுதான். காலச்சூழலுக்கேற்ப மக்கள் நிறம் மாறுபடுகிறது. சில நாடுகளில் மக்கள் அனைவருமே கருப்பாகத்தான் இருக்கின்றார்கள்! அப்படி என்றால் அந்த நாட்டில் அனைவரும் அழகற்றவர்கள் என்று ஆகுமா? இல்லைம்மா! என் முகம் கூட உருண்டையாக அழகாக இல்லையே! உருண்டையான முகம்தான் அழகு என்று யார் சொன்னது? எலும்பு அமைப்பிற்கேற்ப  முகவடிவமும் மாறும். எனக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லையே அம்மா! அப்புறம் எப்படி என்னை அழகு என்று சொல்ல முடியும்? நமக்குத் தாய்மொழி தமிழ்மொழி. அதுபோல் ஆங்கிலம் ஆங்கிலேயர்களுக்குத் தாய்மொழி! மொழி அறிவிற்கும் அழகிற்கும் தொடர்பு இல்லையம்மா! உன்னாலும் எந்த மொழியிலும் தேர்ச்சி பெற முடியும். சிவந்த தோலும்  ஆங்கிலப் பேச்சும்தான் அழகு என நினைப்பது தவறம்மா! காக்கைக்கும் தன் குஞ்சு பொன

நெருப்பாய் நிமிர்ந்தான் முத்துக்குமரன் : புதுவைத் தமிழ்நெஞ்சன் akaramuthala : muthukumaran by thamizh nenjan

Image
நெருப்பாய் நிமிர்ந்தான் முத்துக்குமரன் . - புதுவைத் தமிழ்நெஞ்சன் சூடற்ற தமிழனுக்குச் சூடேற்ற முத்துக்குமரா….! தீப்பந்தம் ஆனாய் – நாடற்ற ஆரிய நாடோடிக் கூட்டமிங்கே நம்மினத்தை அழிக்கிறதே வீணாய்! இந்தீய அரசுன்னைப் படுகொலையும் இம்மண்ணில் செய்தது தான் உண்மை – குமரா..! செந்தீயாய் தமிழினமும் தலைநிமிர தீக்குளியல் செய்ததெல்லாம் வன்மை! யாரென்று நேற்றுவரை நானறியேன் தமிழ்க்குமரா இம்மண்ணில் உன்னை – உன்னை யாரென்று அறியாதார் இன்றில்லை என்பதுதான் நாமறிந்த உண்மை! ஈழத்தில் எரிகிறதே இந்தீயா மூட்டிவிட்ட இனவெறியாம் நெருப்பு – தமிழ் ஈழத்தை அழிக்கின்ற பகையினத்தை அழித்தொழிக்க தமிழ்மறவா விரும்பு! சிங்களத்தின் கூலிப்படை ஆனபின்னர் நாமெதற்குத் தரவேண்டும் மதிப்பு – ஈழச் செங்களத்தில் தமிழினமும் போராட செங்குருதி சிந்துவதே உயர்வு! எரிந்தவனை எரித்துவிட்டு எரிதழலாய் நாம்நிமிர்ந்து பகைமுடிப்போம் தமிழா! – பகை வெறியனைத்தும் வேரோடு பிடுங்கிடவே வீறுகொண்டு விழித்திடடா தமிழா! இனவுணர்வை உன்நெஞ்சில் ஏற்றியிங்கே எப்போதும் வாழ்ந்திடடா தமிழா ! – தமிழ் இனம்வாழ எரிந்துவிட்ட

தமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்! - அண்ணல்தங்கோ ; akaramuthala: chinnachamy by annalthango

Image
தமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்! . -  தமிழ்ப் புரவலர்  தூய தமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ அ) நெஞ்சத் துணிவுடையாய்! – தமிழர் நேர்மைத் திறமுடையாய்! – தமிழர் கொஞ்சும் தமிழ்வளம் பெற – தீயிலே  குளித்த தமிழ் மறவா! ஆ) ‘‘அஞ்சி அடிமைகளாய் – வாழ்பவர் அன்புமக்க ளாகார்!’’ என்றே நெஞ்சுரம் காட்டி நின்றாய்! – சின்னப்பா! நெருப்பிலே நின்றுவென்றாய்! (நெஞ்சத்) இ) வஞ்சகெஞ்ச வடவர்! – திருந்த வாழ்வை நெருப்பில் இட்டாய்! செஞ்சொல் தமிழ மகனே! – சின்னப்பா! திருக்குறட் கோமகனே!  (நெஞ்சத்) உ) பஞ்செனத் தீயில் இட்டாய் ! – உடலைப் பைந்தமிழ் காத்திடவே! அஞ்சாத் தமிழ் அரிமா! – சின்னப்பா! ஆண்மகன் நீயே! அப்பா (நெஞ்சத்) ஊ) மஞ்சள் இழக்க வைத்தாய்! – உன்துணை வாழ்வில் நெருப்பை வைத்தாய்! பிஞ்சுமகள் செல்வி! – தமிழ்த்தாய்ப் பெருமை அடைய வைத்தாய்! (நெஞ்சுத்) எ) பகைவர் உள்ளம் திருந்த – தமிழர் பண்பை உணர்த்தி விட்டாய்! நகைக்கத் தகும் மொழியாம் – இந்தியை நாடே வெறுக்க வைத்தாய்! (நெஞ்சத்) ஏ) தகைமை மிகும் வள்ளுவர் – தமிழ்ச் சான்றோர் சொல் சான்றாண்மை! மிகும் அறப்போர் புரிந்தாய்! & வாழ்விலே

அகரமுதல : கவிதை : செந்தமிழ்க் காதலன் சின்னச்சாமி akaramuthala - chinnachamy

Image
செந்தமிழ்க் காதலன் சின்னச்சாமி – திருச்செங்கோடு என்.கே.பி.வேல் . 1. செந்தமிழுக் குயிரீந்த சின்னச்சாமி! தென்னகத்து வரலாற்றின் சின்னமாம் நீ! வெந் தணலில் நொந்துயிரை இந்திக் காக விட்டவனே! மொழிக்காதல் கற்றவன் நீ! தந்தைதாய் மனைமக்கள் சொந்தம் நீத்தாய்! தண்டமிழின் உயிர்ப்பண்பாம் மானம் காத்தாய்! அந்தோநான் என்னென்பேன் அரிய தியாகம் யாருனைப்போல் தாய்மொழிக்காகச் செய்தா ரிங்கே? 2. தொடுத்தபுகழ்க காஞ்சிமா நகரில் தோன்றித் தொல்லாண்மைத் திராவிடரின் சோர்வைப் போக்கி அடுக்குமொழி மேடைகளில் அழகாய்ப் பேசி அனைவருமே தமிழ் சுவைக்க எளிய தாக்கிக் கொடுத்தபெரும் தமி அறிஞர் அண்ணா இந்தி குறித்தெடுத்த போராட்டக் களத்தில் உன்னைக் கொடுத்துமுதற் களப்பலியாய் கொண்டாய் வெற்றி! குலவு தமிழ்க் காவலனே! சின்னச்சாமி! 3. ஏடதிலே தமிழ்ப் பெருமை எழுதித் தீர்ப்பார்; இணையில்லை தமிழிசைக்கே என்பர்; கூத்து; நாடகங்கள்; திரைப்படங்கள்; மேடைப்பேச்சும் நடத்திடுவார்; பொருள்சேர்ப்பார்; தமிழால் வாழ்வார் நாடறிய இந்திக்கே ஓர்போர் ஆட்டம் நடத்திடவே அரசதனை ஒடுக்கக் கண்டாய் தேடரிய திருவிளக்கே சின்னச்சாமி! தீக்குளித

அகரமுதல - கவிதை - உரிமை! : ஈரோடு இறைவன் akaramuthala : urimai

Image
உரிமை ! – ஈரோடு இறைவன் .. விலங்கு வாழ்கிறது காட்டில் விடுதலையோடு! மீன் தண்ணீரில் வாழ்கிறது விடுதலையோடு ! புழு  மண்ணில் வாழ்கிறது விடுதலையோடு ! தமிழா நீ வாழ்கிறாயா விடுதலையோடு ! - அகரமுதல

அகரமுதல - கவிதை - கொரண்டிப்பூ :இளையவன் செயா

Image
கொரண்டிப் பூ!   02 பிப்பிரவரி 2014        இளையவன் – செயா  மதுரை பெரியார் ஆண்டு 135 தொ.ஆ.2878  தி.ஆ. 2045 சுறவம் ( தை ) 16            29–01–2014 ஆழி   நீர்ப்பரப்பில்   ஆடுகின்ற  நிழலாய் ஊழிப்   பெருவாழ்   விலுழன்று  உதட்டாலே வாழி   வாழியெனும்  வாழ்த்துக்கு  வயமாகித் தாழியள   வாய்த்தாங்கும்  துன்பச்   சுமைதனை மறப்பதற்   கோர்நாள்   மல்லைநகர்  சென்றிந்தேன் பிறப்பதன்  பெரும்பயனை  பிற்றைநாள்   மக்களுக்கு உரைப்பது  போன்றுருவச்  சிலைகள்  என்னுளத்துச் சிறுகு   மறக்கப்   பெருந்துணை  ஆயிற்றே! மல்லை   நகரின்  மாண்புறு  துறைஅன்று சொல்ல  ரியபொருட்  களைச்சேர்த்  தனுப்பி இல்லை  எமக்கீடென  எழிலுட  னிலங்கி எல்லை  யிலாப்பெருமை   யினால்ஏற்றம்  பெற்றதே! கடல்  கடந்து  கலம்விட்ட  துறையின்று மடல்    உதிர்ந்த   மலராக;    அழகு உடல்   இளைத்த   உருவாகி    புகழுக்கு இடர்ப்   பாடாயிருந்த  நிலையெண்ணியும்  வாழ்வில் தொல்லையெனும் சுமையைத் தொகையாய்ச் சேர்த்திட்ட கல்லொத்த   இதயத்தில்  கணநேரம்  நினைந்து மல்லாந்து  படுத்தேன்   மணல்  வெளியில் முள்ளாகிக்   குத்தியதே  முதுக

அகரமுதல - சிறார் இலக்கியம் - மூன்று உயர்ந்தவர்கள் - சிறுகதை akaramuthala-story

Image
மூன்று உயர்ந்தவர்கள் – அன்பு   தமிழய்யா பத்தாம் வகுப்பு  அ பிரிவைக் கடந்து செல்லும் பொழுது  கணக்கையா யாரையோ அடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளே நுழைந்தார்.   “என்னங்கய்யா, நல்லானையா அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? அவன் நன்றாகப் படிப்பானே!”   கணக்கையா அடிப்பதை நிறுத்திக் கொண்டு, “நன்றாகப் படித்து என்ன? நல்ல பண்பு இருக்க வேண்டுமல்லவா” என்றார்   பெயருக்கேற்ற  நல்லவன்தான் அவன். “என்ன  நடந்தது” என்றார்.   “போன வகுப்பு இவர்களுக்கு விளையாட்டு. யாருமில்லை. நான் மட்டும் பையை வைத்து விட்டுத் தலைமை ஆசிரியரைப் பார்த்து விட்டு வந்தேன். வரும் பொழுது பார்த்தால் என் கைப்பையில் இருந்து பணப் பையை எடுத்துக் கொண்டு இருக்கின்றான். கேட்டால், கீழே விழுந்து இருந்தது. எடுத்து உள்ளே வைத்தேன் என்கிறான். ஏதாவது பணத் தேவையா  உண்மையைச் சொல் தருகிறேன் என்றால்  மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்கிறான். பத்தாம் வகுப்பு தேறிய பின் மேல் படிப்பிற்கு உதவ விரும்பும் என்னிடமே பொய் சொல்கிறா னே என்றுதான் அடித்தேன்” என்றார்.    “என்ன நல்லான்! எதற்கு நீ எடுத்தாய்.”  ”ஐயா, உண்மையிலேயே