Posts

Showing posts from November, 2013

செந்தமிழாற்றுப்படையில் தமிழின் சிறப்புகள்

Image
சங்கப்பலகை செந்தமிழாற்றுப்படையில் தமிழின் சிறப்புகள் Byசு. சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. First Published : 24 November 2013 02:26 AM IST புகைப்படங்கள் இன்றைய நாகரிக வளர்ச்சியில் மனிதனின் பண்பு, பழக்கவழக்கம் மனிதநேயம் மற்றும் மரபு சார்ந்த நிலைகள் போன்றவை மாறுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அவன் பேசக்கூடிய மொழியும் சிதைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையை உணர்ந்து 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை உணராத சில தமிழ் மக்களுக்குத் தமிழின் சிறப்பு, இயல்பு, எதிர்காலத் தமிழக நிலை, தமிழை வளர்க்கும் முறை ஆகியவற்றைக் கூறி, தமிழனைத் தமிழ் படித்து தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி சுந்தர சண்முகனார் என்பவர் "செந்தமிழாற்றுப்படை' என்னும் நூலை 1951 ஆம் ஆண்டில் இயற்றியுள்ளார். 519 அடிகள் கொண்ட இந்நூலில் தமிழின் சிறப்புகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. "செந்தமிழாற்றுப்படை' என்பது தமிழ் கற்ற ஒரு தமிழன், தமிழ் கற்காத மற்றொரு தமிழனை, தமிழ் கற்றுத் தாய்நாட்டுக்குத் தொண்டு புரிவதற்காகத்

இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் ! கவிஞர் இரா .இரவி

Image
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் ! கவிஞர் இரா .இரவி இருபதாம் நூற்றாண்டுத்  தொல்காப்பியர் இலக்குவனார் !   கவிஞர் இரா .இரவி வளமை மிக்க தமிழுக்காக உழைத்த தமிழ் உண்மை வாய்மை மேடு  ஊரில் பிறந்த தமிழ் வாய்மை சிங்காரவேலரின் ம்கனாகப்  பிறந்த தமிழ்ச்சிங்காரம் இரத்தினம் அமையார் பெற்றெடுத்த தமிழ் இரத்தினம் திருக்குறளை நேசித்து ஒப்பற்ற உரை எழுதியவர் திருவள்ளுவரையே மகனாகப் பெற்றவர் அறிஞர் அண்ணா பிறந்த ஆண்டில் பிறந்த தமிழ் அறிஞர் அறிஞர் அண்ணாவின் பாராட்டைப் பெற்றத் தமிழ் அறிஞர் உயர்நிலைப்  பள்ளியின் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி உயர்ந்த உசுமானியப் பல்கலைக் கழகம் வரை உயர்ந்தவர் கவிஞர் கட்டுரையாளர் எழுத்தாளர் பன்முக ஆற்றலாளர் கற்கண்டுத் தமிழுக்கு இனிமை சேர்த்த இனியவர் தமிழுக்காக சிறை சென்ற மாவீரர் தமிழுக்காகவே  வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர் தன்னலம் மறந்து தமிழ் நலம் காத்தவர் தமிழுக்காகவே வாழ்க்கையை ஈந்தவர் தன் சொந்த சொத்துக்களை தமிழுக்காக விற்றவர் தன் சொந்த மொழியான தமிழை சொத்தாக மதித்தவர் ஆதிக்க இந்தியை எதிர்த்த கொள்கைக் குன்று அழகு தமிழின் புகழை