Posts

Showing posts from January, 2013

திருக்குறள் Thirukkural 543

 செங்கோன்மை திருக்குறள் - Thirukkural    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் ன்றது மன்னவன் கோல். - (குறள் : 543 ) உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அதுபோல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.  ++++++++++++++++++++++++++++++++++++++++++++ அந்தணர் - அறிநெறி வாழ்வோர் ; எச்சாதிப்பிரிவினரும் அல்லர்

Thirukkural திருக்குறள் 150

  அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. - குறள்: 150,  அதிகாரம் : பிறனில் விழையாமை , கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .      பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும். - கலைஞர் மு. கருணாநிதி   காண்க : http://literaturte.blogspot.in/search?q=150

Thirukkural திருக்குறள் 37

குறள் அமுதம்     அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (குறள்எண்:37) குறள் விளக்கம்    மு.வ : பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++    (பல்லக்கைச் சுமப்பவன் பாவி எனவும்  பல்லக்கில் இருப்பவன் நல்வினை யளான் எனவும் ஒப்பிடுவது தவறு.)

Thirukkural திருக்குறள் 157

Image
திருக்குறள் திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று. தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.   திருக்குறள் (எண்: 157)  அதிகாரம்: பொறை உடைமை

inidhea ilakkiyam 6 :இனிதே இலக்கியம் 6 - விண்ணப்பத்தைக் கேட்பாயாக!

Image
    http://thiru-padaippugal.blogspot.in/2013/01/inidhea-ilakkiyam-6-6.html

Thirukkural திருக்குறள் 1211

கனவுநிலை உரைத்தல் திருக்குறள் - Thirukkural    காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.   - (குறள் : 1211 ) (யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?

Thirukkural திருக்குறள் 551

Image
திருக்குறள் கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்துஒழுகும் வேந்து    குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்.  திருக்குறள் (எண்: 551)  அதிகாரம்: கொடுங்கோன்மை

Thirukkural திருக்குறள் 861

குறள் அமுதம்             வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. (குறள்எண்:861) குறள் விளக்கம்       மு.வ : தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா : பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க. English Version With stronger than thyself, turn from the strife away; With weaker shun not, rather court the fray. ( Kural No : 861 )   Kural Explanation: Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.  

இனிதே இலக்கியம் 5 - இறையே ஏற்பாயாக!

Image
 

திருக்குறள் Thirukkural 974

 பெருமை     திருக்குறள் - Thirukkural   ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. - (குறள் : 974) ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

Thirukkural திருக்குறள் 36

 அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை . - குறள்: 36,  அதிகாரம் : அறன் வலியுறுத்தல் , கிளை : பாயிரம் , பிரிவு : அறம் .      பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். - கலைஞர் மு. கருணாநிதி

Thirukkural திருக்குறள் 200

குறள் அமுதம்     சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். (குறள்எண்:200) குறள் விளக்கம்     மு.வ : சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது. சாலமன் பாப்பையா : சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.   English Version   Thirukural » Aram           If speak you will, speak words that fruit afford, If speak you will, speak never fruitless word. ( Kural No : 200 )   Kural Explanation: Speak what is useful, and speak not useless word s.  

Thirukkural திருக்குறள் 7

  தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. - குறள்: 7,  அதிகாரம் : வழிபாடு , கிளை : பாயிரம் , பிரிவு : அறம் .     ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. - கலைஞர் மு. கருணாநிதி

திருக்குறள் Thirukkural 373

ஊழ் திருக்குறள் - Thirukkural    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும். - (குறள் : 373 ) ஒருவன் நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தவாறு உள்ளாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

Thirukkural திருக்குறள் 844

குறள் அமுதம்     வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. (குறள்எண்:844) குறள் விளக்கம்    மு.வ : புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும். சாலமன் பாப்பையா : அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.     English Version Thirukural » Porul        What is stupidity? The arrogance that cries,. ‘Behold, we claim the glory of the wise.’ ( Kural No : 844 )   Kural Explanation: What is called want of wisdom is the vanity which says, “We are wise”.  

Thirukkural திருக்குறள் 545

குறள் அமுதம்     இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு.   (குறள்எண்:545) குறள் விளக்கம்       மு.வ : நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும். சாலமன் பாப்பையா : அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும். English Version   Thirukural » Porul            Where king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers, there rich abundance crowns the fields. ( Kural No : 545 )   Kural Explanation: Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.  

Thirukkural திருக்குறள் 640

Image
திருக்குறள் முறைப்படச் சூழ்ந்தும் முடிவுஇலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்    (செயல்களை முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர். + திருக்குறள் (எண்: 640)  அதிகாரம்: அமைச்சு

இனிதே இலக்கியம் - 4 : முத்தொழில் ஆற்றுநரே தலைவர் - Inidhea Ilakkiyam 4

 இனிதே இலக்கியம் ! 4   முத்தொழில் ஆற்றுநரே தலைவர் உலகம் யாவையும் தாமுளவாக்கலும் , நிலை பெறுத்தலும் , நீக்கலும் , நீங்கலா , அலகி லா விளை யாட்டுடை யார் , அவர் தலைவர்!   அன்னவர்க் கேசரண்   நாங்களே ! கவிப்பேரரசர் கம்பர் தம்முடைய இராமகாவியத்தில் எழுதிய தற்சிறப்புப்பாயிரம். உலகங்கள் யாவற்றையும் தாம் உள்ளவாறு படைத்தலும் அவ்வுலகங்களில் உள்ள அனைத்து வகை உயிர்களையும் நிலைபெறச்செய்து காத்தலும் அவற்றை நீக்க வேண்டிய   நேரத்தில் நீக்கி அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் இடைவிடாமல்(நீங்கலா) அளவற்ற(அலகுஇலா) திருவிளை யாடல்களாகப் புரிபவர் யாரோ , அவரே எங்கள் தலைவர்! அவரிடமே நாங்கள் அடைக்கலமாகிறோம்!  என்கிறார் கம்பர். குறிப்பிட்ட கடவுள் எனக் குறிக்காமையால் கடவுள் நம்பிக்கை உள்ளவர் யாவருமே தத்தம் கடவுளை வணங்கும் வகையில்   பொதுவாக அமைந்த பாடல்களுள் இதுவும் ஒன்று. உலகம் முதலான பொதுவான சொற்களால் முதல் பாடலைத் தொடங்குதல் தமிழ் மரபு. அதற்கிணங்கக் கம்பர்   உலகம் என்னும் சொல்லுடன் தம் படைப்பைத்   தொடங்கி உள்ளார். உலகம் என்றோ உலகம் முழுமை என்றோ கூறாமல் அனைத்து உ

திருக்குறள் Thirukkural 427

அறிவுடைமை திருக்குறள் - Thirukkural    அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். - (குறள் : 427 ) அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப் போவதை முன்னதாக எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர். http://literaturte.blogspot.in/search?q=427

திருக்குறள் Thirukkural 183

 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும். - குறள்: 183, அதிகாரம் : புறங்கூறாமை , கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .     கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று. - கலைஞர் மு. கருணாநிதி

திருக்குறள் Thirukkural 1088

குறள் அமுதம்     ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு. (குறள்எண்:1088) குறள் விளக்கம்       மு.வ : போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே. சாலமன் பாப்பையா : களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே. English Version   Thirukural » Kamam எழுத்தின் அளவு:             Ah! woe is me! my might, That awed my foemen in the fight, By lustre of that beaming brow Borne down, lies broken now! ( Kural No : 1088 )   Kural Explanation: On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless

திருக்குறள் பொதுநூல்

Image
திருக்குறள் பொதுநூல் By dn First Published : 27 January 2013 02:21 AM IST புகைப்படங்கள் வடமொழியில் வழங்கும் நீதி நூல்களுக்கும் வள்ளுவர் நீதி நூலுக்கும் பெரிதும் வேற்றுமை காணப்படுகின்றது. வடமொழி நீதி நூல்கள் பெரும்பாலும் சாதி வேற்றுமையை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு, தண்டம் முதலிய துறைகளில் ஒரு சாதிக்கொரு நீதியாகவும், ஒரு குலத்துக்கொரு நீதியாகவும் அமைத்துக் கூறுகின்றன. அறங்கூறவையத் தலைவனான நீதியாளன், குற்றம் செய்தான் ஒருவனது குலத்தை அறிந்தே அதற்கேற்ற தண்டனை விதிக்க வேண்டும். ஒரு குற்றத்தை உயர்குலத்தானொருவன் செய்தால் எளிய தண்டனையும், தாழ்குலத்தானொருவன் செய்தால் கடிய தண்டனையும் விதிக்கப்பட்டிருத்தலை மனுநீதி முதலாய நீதி நூல்களிற் காணலாம். ஆனால், திருவள்ளுவர் நீதி நூலில் சமன் செய்து சீர்தூக்கும் கோல் போன்ற நடுநிலை வழுவாத பொதுநீதியே போற்றப்பட்டுள்ளது. ""வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி''! டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளையின், "திருவள்ளுவர் நூல் நய'த்திலிரு

புலித்தடம் தேடி 8 - மகா.தமிழ்ப்பிரபாகரன் : Puliththadam theadi 8

Image
     

இனிதே இலக்கியம் 3 விண்போல் பொதுவான கடவுள் Inidhea Ilakkiyam 3

இனிதே இலக்கியம்   3 விண்போல் பொதுவான கடவுள் - இலக்குவனார் திருவள்ளுவன் முத்தே பவளமே மொய்த்த பசும் பொன் சுடரே சித்தே என் உள்ளத் தெளிவே பராபரமே. கண்ணே    கருத்தே    என்கற்பகமே   கண்நிறைந்த விண்ணே   ஆனந்த   வியப்பே   பராபரமே.    எக்கடவுளரை வணங்குவோரும் போற்றி வழிபட உதவும் தமிழ்ப்பாடல்களுள் தாயுமானவரின் இப்பாடலும் ஒன்று.   தாயுமானவர் திருப்பாடலில் உள்ள   ‘ பராபரக்கண்ணி ’ என்னும் தலைப்பில் இடம் பெற்ற பாடல் இது.   விலைமதிப்பற்ற முத்தாகவும் பவளமாகவும்   பொன்னொளியாகவும் உள்ளத்தின் தெளிவாகவும் இருக்கின்ற   எல்லாவற்றிலும் மேலான பரம்பொருளே! நற்பார்வையை நல்கும் கண்ணாகவும் பிறரை ஈர்க்கக்கூடிய கருத்தாகவும் கேட்டன வழங்கும் கற்பக மரமாகவும்   கண்ணுள் நிறைந்த விண்ணாகவும் களிப்பு தரும்   வியப்பாகவும் காட்சி தரும் பரம்பொருளே! உன் அருள்வேண்டிப் போற்றுகின்றேன்! அருள்தருவாயாக!     இப்பாடல் மூலம் கிடைத்தற்கரிய பொருளாகவும் விரிந்த விண்ணாகவும் விந்தையாகவும் எல்லாம் அருள்பவனாகவும் கடவுள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றார் தாயுமானவர். விண் அனைவருக்கும் பொது என்பதுபோல

Thirukkural திருக்குறள் 220

    திருக்குறள் - Thirukkural   ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து. - (குறள் : 220) பிறர்க்கு உதவி செய்வதால் பொருள்கேடு வரும் என்றால் அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.

திருக்குறள் Thirukkural 740

Image
திருக்குறள் ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்துஅமை வில்லாத நாடு.  நல்ல அரசன் பொருந்தாத நாடு, நன்மைகள் எல்லாம் அமைந்திருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமற் போகும்.  திருக்குறள் (எண்: 740)  அதிகாரம்: நாடு

புலித்தடம் தேடி 7 - Puliththadam theadi

Image
 

இனிதே இலக்கியம் 2 போற்றி! போற்றி! inidea ilakkiyam

இனிதே இலக்கியம்   2 போற்றி! போற்றி! - இலக்குவனார் திருவள்ளுவன் பண்ணினை இயற்கை   வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி   இறைவனைப் பொதுவான பண்புகள் அடிப்படையில் போற்றும் தமிழ்ப்பாடல்கள் எச்சமயத்தவரும் எக்கடவுளை வணங்குவோரும் ஏற்கும் சிறப்பினைப் பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த்தென்றல் திரு . வி . க . எனப்படும் திரு.வி.கல்ணயாண சுந்தரனாரால்   எழுதப்பெற்ற ‘ பொதுமை வேட்டல் ’ என்னும் நூலில்   இருந்து எடுக்கப்பட்ட பாடல் இது.    இயற்கையோடு இயைந்ததாக இசையை அமைத்த பண்பாளரே போற்றி! பெண்மையின் சிறப்பாகத் தாய்மையை வைத்த பெரியோய் போற்றி!   வள்ளல் தன்மையை உயிரினங்களிடம் வைத்த வள்ளலே போற்றி! உண்மையை உள்ளத்தில் தங்க வைத்த   உறவாளரே போற்றி! உன்னை வணங்குகின்றேன்.    இயற்கையில் இருந்து இசை உருவான உண்மையையும் தாய்மையின் சிறப்பையும் எல்லா உயிரினங்களிடமும் வள்ளல் தன்மை என்பது இருக்கும் என்பதால் நாம் கொடைச்சிறப்புடன் வாழ வேண்டும் என்ற வலியுற