Posts

Showing posts from October, 2012

படிக்காத மேதை' - "மஞ்சரி' தி.ச.இர.

Image
"படிக்காத மேதை' -  "மஞ்சரி' தி.ஜ.ர.! கதிர் Byவளவ.துரையன் First Published : 14 October 2012 05:56 AM IST புகைப்படங்கள் தமிழில் "ரீடர்ஸ் டைஜஸ்ட்' போன்று ஓர் இதழை வெற்றிகரமாக சுமார் 25 ஆண்டுகாலம் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தியவர் "தி.ஜ.ர.' என்றழைக்கப்படும் திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன். அவர் நடத்திய "மஞ்சரி' எனும் இதழின் பெயராலேயே "மஞ்சரி தி.ஜ.ர.' என்றழைப்பதும் சாலப்பொருத்தம். ÷1901-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறந்தவர். ஒரத்தநாடு சத்திரத்தில் இருந்த பள்ளியில் நான்காம் வகுப்பு வரையே படித்தார். படிப்பில் முதன்மையாகத் திகழ்ந்தாலும் தந்தை அவரைப் படிக்க வைக்கவில்லை. ÷தி.ஜ.ர.வின் தந்தை "கர்ணம்' வேலை பார்த்து வந்ததால், தந்தையாருடன் ஊர் ஊராய்ச் சுற்றினார். இதனால் தமது படிப்பைத் தொடர முடியாத தி.ஜ.ர., தனக்குத் தானே ஆசிரியராக இருந்து படிக்கத் தொடங்கினார். அவருக்குக் கிடைத்த அனைத்து நூல்களையும் படித்தார். விஞ்ஞானத்தில் குறிப்பாக,

தமிழிலிருந்து உசுபெகிக்கு, உசுபெகியிலிருந்து தமிழுக்கு...

Image
தமிழிலிருந்து உசுபெகிக்கு, உசுபெகியிலிருந்து தமிழுக்கு... கதிர் Byசந்திப்பு : வெங்கடேசன் First Published : 24 October 2012 11:11 AM IST புகைப்படங்கள் உஸ்பெகிஸ்தான் பல்கலைக்கழக பேராசிரியரும், எழுத்தாளர் கு. சின்னப்பாரதியின் "பவளாயி' புதினத்தை உஸ்பெக்கில் மொழி பெயர்த்தவருமான லோலா மக்துபாஅண்மையில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு தமிழ் இலக்கியம், இலக்கியம் தொடர்பாக கற்றுக்கொள்ள வருகை தந்தார். ஒரு மாணவியைப் போல அவர் காட்டும் ஆர்வம் நம்மை வியக்க வைத்தது. அவருடன் அவருடைய இலக்கியப் பணிகள் குறித்து கேட்டதிலிருந்து... ""நான் உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் ஸ்டேட் இன்ஸ்டியூட் ஆஃப் ஓரியண்டல் ஸ்டடிஸ் பல்கலைக்கழகத்தில் செளத் ஏசியன் ஸ்டடிஸ் பிரிவில் மூத்த ஆசிரியராக உள்ளேன். அங்கு இந்தி, உருது மொழிகளைக் கற்பித்து வருகிறேன். தற்போது தமிழும் கற்பிக்கிறேன். தமிழ் இலக்கியம், இலக்கணம் தொடர்பான பாடங்களைக் கற்பதில் ஆர்வம் இருந்தாலும், போதுமான பயிற்சி இல்லை. அதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறேன். செளத் ஏசியன் ஸ்டடிஸ் துறையின் தல

நின்று எரியும் விளக்குஇரா.சூடாமணி!

Image
நின்று எரியும் விளக்கு ஆர்.சூடாமணி! தினமணி Byசு.இரமேஷ் First Published : 23 September 2012 12:00 AM IST புகைப்படங்கள் எழுத்தே உயிர்மூச்சாகக் கொண்டிருந் தவர்; சமூக முன்னேற்றத்தைத் தம் எழுத்தில் அடி நாதமாக வைத்திருந்தவர்; தன் எழுத்தின் பயன் சமூக சீர்திருத்தத்துக்கு சென்று சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர். அவர் விருப்பப்படி அவரின் மறைவுக்குப் பிறகு பல கோடி மதிப்புள்ள சொத்து இராமகிருஷ்ண மடத்துக்கே எழுதி வைக்கப்பட்டது. இத்தகு சிறப்பு மிகுந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி 1931-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராகவன், சென்னை மாநில தலைமைச் செயலராக இருந்தார். தாய் கனகவல்லி  சிற்பம், ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவர். பின்னாள்களில் சூடாமணி தன்னை ஓர் ஓவியராக நிலைநிறுத்திக் கொள்ள அவருடைய தாயும் காரணமாக இருந்திருக்கிறார். சூடாமணியோடு பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன். ÷எல்லாக் குழந்தைகளையும் போல ஆரோக்கியமாக வளர்ந்த சூடாமணிக்கு, ஐந்தாம் வயதில் அம்மை நோய் தாக்கியது. பலகட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு மரணத்துக்கு மிக அருகில் சென்று

புவியரசரும் கவியரசரும்

Image
புவியரசரும் கவியரசரும் By முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி தினமணி First Published : 23 September 2012 12:00 AM IST புகைப்படங்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு  தஞ்சாவூரிலேயே தங்கியிருந்து  கி.பி. 1676 முதல் 1855 வரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களுள் இரண்டாம் சரபோஜி முக்கியவானவர்.  இவர் 1798 முதல் 1832 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளார்.  ஸ்வார்ட்ஸ் பாதிரியாருடன் மிக நெருங்கிய நட்புறவு கொண்டிருந்த இரண்டாம் துளஜா மன்னர் தனக்கு ஆண் குழந்தை இல்லாத காரணத்தினால் கி.பி. 1787-இல் சரபோஜியை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொண்டார். ÷சரபோஜி அரசுப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னமேயே ஸ்வார்ட்ஸ் பாதிரியார் இவ்வுலக வாழ்வை விட்டுச் சென்று விட்டார். ÷சரபோஜி தன் ஆசிரியர் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடமிருந்து ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற பல மொழிகளைக் கற்றுக் கொண்டார்.  மராட்டி, தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் சிறந்த கல்வியறிவு உடைய இவர் தமிழ், சம்ஸ்கிருதம், மராட்டி ஆகிய மொழிகளில் 19 நூல்கள் வரை இயற்றியிருக்கிறா