Ilakkuvanarin pataippumanikal 68: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 68. மொழி பெயர்க்குங்கால் நாட்டின் மரபுக்கேற்பத் தழுவி இயற்றப்படல் வேண்டும்.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 68. மொழி பெயர்க்குங்கால் நாட்டின் மரபுக்கேற்பத் தழுவி இயற்றப்படல் வேண்டும்.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 11/10/2011



இம்முதல் நூலைத் தொகுத்தும், விரித்தும், சில பகுதிகளைத் தொகுத்தும், சில பகுதிகளை விரித்தும், இரண்டும் உடன்சேரவும், மொழி பெயர்த்தும் நூலியற்றலாம் என்றார். மொழி பெயர்க்குங்கால் நாட்டின் மரபுக்கேற்பத் தழுவி இயற்றப்படல் வேண்டும். வேற்று நாட்டுக்குரிய மரபை வேற்று மொழியில் உள்ளவாறு தமிழ் நாட்டுக்குத் தமிழ் மொழியில் தருவதால் பெரும்பயன் விளையாது. தமிழ் வழக்கும் சிதைவுறும். நாட்டுக்குப் பொருந்தாத வழக்கை நாட்டு மக்கள் வெறுப்பர். மொழி பெயர்க்கப்பட்ட நூல் எவராலும் விரும்பப்படாது. வீணே கிடந்து மறையும். ஆதலின் ஆசிரியர் தொல்காப்பியர், “மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல்” என்றார். மொழி பெயர்த்து நூல் செய்தலையும் ஆசிரியர் குறிப்பிட்டதனால் ” அறிவு எங்கிருப்பினும் கொள்ளுதல் வேண்டும். நம் நாட்டில் தோன்றிய அறிவுதான் நமக்கு வேண்டுமென்று இருத்தல் அறிவுடைமையாகாது” என்பதனைத் தெளிந்திட வேண்டும். பிற மொழிகளைக் கற்று அம்மொழியில் உள்ள நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கும் தொண்டினையும் புலவர்களும் அரசும் மேற்கொள்ளுதல் வேண்டும். அரசு அதற்கெனத் தனித்துறை யொன்று அமைத்துப் பிற மொழிகளில் வெளிவரும் உயர்ந்த நூல்களை அவ்வப்போது தமிழில் மொழி பெயர்த்திடச் செய்தல் வேண்டும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 252)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue