Ilakkuvanarin padaippumanikal 54: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 54. எழுத்துச் சான்றுடன் திருமணம்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 54. எழுத்துச் சான்றுடன் திருமணம்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 10, 2011


கரணம் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் கொள்ளலாம்.  இக்காலத்துங் கரணம் என்று சொல்லப்படுபவர்கள் ஊர்க்கணக்கு எழுதும் கணக்கப்பிள்ளைகள் ஆவார்.  கரணம், கணக்கு எழுதுவோரைக் குறிப்பதால் எழுதுதலையும் குறிப்பதாகும்.  ஆதலின் இன்ன ஆடவனுக்கு இன்ன பெண் மனைவி என்று எழுதிக்கொள்ளும் பழக்கமும் இருந்திருக்கலாமன்றோ? அவ்வாறு எழுதுதலையே ஆசிரியர் தொல்காப்பியர் கரணம் என்று குறித்திருக்கலாமன்றோ? இன்றும் பழங்கால முறைப்படி திருமணம் கொள்வோர், திருமணத்துக்கு முன்னால் மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் மணமகள் வீட்டில் கூடி இவ்வாறு எழுதி உறுதிப்படுத்திக் கொள்வதைக் காணலாம்.  இந்நிகழ்ச்சியை மணவோலை எழுதுதல் என்றும், நிச்சயார்த்தம் என்றும்,  வெற்றிலை பாக்கு மாற்றுதல் என்றும் அழைப்பர்.  தொல்காப்பியர் காலத்து வழக்கமே இன்றும் தொடர்ந்து வந்துள்ளது என்று கொண்டால் குற்றம் என்னை? இப்பழக்கமே பதிவு முறையாக வளர்ச்சி பெற்றுள்ளது.
ஆதலின் அன்று எழுத்துச் சான்றுடன் (கரணமொடு புணர) தலைவன் தலைவியைப் பெற்றான் என்று கூறுதல் பொருத்த முடைத்தாகும் என்பதில் தவறில்லை.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:178)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue