Posts

Showing posts from May, 2011

thamizh kadamaigal 2: perunchithiranar: தமிழ்க்கடமைகள் 2: தமிழ் வாழவேண்டுமெனில் : பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழ் வாழவேண்டுமெனில் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : May 17, 2011 செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரததல் வேண்டும் செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும் முந்தைவர லாறறிநது தெளிதல் வேண்டும் முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும் வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம் நோக்கிநடை யிடல்வேண்டும்! தமிழ்தான் வாழும்! தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந் தரங்குறைந்த தமிழ்வழக்கை நீக்கல்  வேண்டும் தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள்  தோறும் தொங்குகின்ற பலகைகளை மாற்றச்  சொல்லக் கண்டுநிகார் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும் கற்கின்ற சுவடிகளில் செய்தித் தாளில் விண்டுரைக்கா  அறிவியலில் கலையில் எல்லாம் விதைத்திடுதல் வேண்டும் தமிழ்; வாழும் அன்றே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Thamizh kadamaigal: தமிழ்க்கடமைகள் 3- தமிழ் மயம் ஆகுக :மாகறல் கார்த்திகேயனார்

தமிழ் மயம் ஆகுக இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : May 17, 2011 தமிழ் கற்க தமிழை முன்னே நீ கற்க; நின் மகனுக்குக் கற்பிக்க; எவ்வளவு கூடுமோ அவ்வளவு கற்க; கற்பிக்க; கேட்க; கேட்பிக்க; இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசற்க; புகழ் நிமித்த மாகவும் பொருள் நிமித்த மாகவும் ஆங்கிலம் கற்றல் சிறப்பாகாது; எப்போதும் தமிழையே தெய்வம் போலவும் நற்றாய் போலவும் சிந்திக்க; நீ தமிழ் மயம் ஆனால் நின்மக்களும் தமிழ்மயம் ஆவர்; நின்குடியும் தமிழ் மயமாகும். நின் கை தமிழ்நூல் எழுதுக நின் வாய் தமிழையே பேசுக நின் மனம் தமிழையே சிந்திக்க நோய் கொண்டு மெலியனாயின் மருந்துண்டு வலியனாகித் தமிழ் கற்க! - மாகறல் கார்த்திகேயனார்