Posts

Showing posts from January, 2010
இலக்கியத்தின் திறவுகோல் இலக்கணம் ஆதீனப் புலவர் மு.சிவசந்திரன் First Published : 17 Jan 2010 02:26:00 AM IST Last Updated : தமிழ்மொழியின் சிறப்பு, பலவகைகளில் உள்ளன. இதன் சிறப்பு, படைப்பு நூல்களான இலக்கியங்களிலும் படைப்பு நூல்களின் படைப்பினைத் திறவுகோல் இட்டுத் திறக்கும் இலக்கணங்களிலும் மிளிர்கிறது.இலக்கணம் கசப்பானதா? தேவையற்றதா? தள்ள வேண்டியதா? என்று பலரும் பலவாறாகச் சிந்திக்கும் வண்ணம் அதன் கடுமை அமைந்துள்ளது. முன்னோர்கள் மிகக் கடுமையாக இலக்கணக் கருத்துகளைக் கூறியுள்ளமைக்குக் காரணம் என்ன?"இலக்கியம்', அறைக்குள் இருக்கும் வைரக்
செந்நெல்லுக்குப் பதிலாக மஞ்சள் அரிசி! முனைவர் மலையமான் First Published : 24 Jan 2010 02:30:43 AM IST Last Updated : பழங்காலத் தமிழ் மக்கள், அழகின் வீடாகிய இயற்கையை வியந்தார்கள். விழியாலும் அதைப் போற்றினார்கள். விரும்பி வழிபட்டார்கள். இறைவனுக்குரிய முதன்மை வழிபடு பொருளாக இயற்கையை அமைத்துக் கொண்டார்கள். இயற்கை அழகை விழைவுடன் போற்றிய மரபு இப்படித்தான் பிறந்து, வளர்ந்து, தலைமை பெற்றது.மனதை மயக்கிய இயற்கைக்கு அடுத்தபடியாக, மனித வாழ்க்கைக்கு மிகவும் பயன்பட்ட பொருளைப் போற்றும் பழக்கம் ஏற்றம் பெற்றது. வேட்டையாடி, காட்டில் உணவு தேடுவதையே நாளும
மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: கண்ணகியின் நம்பிக்கையும் குலச்செருக்கும் குச்சனூர் கிழார் First Published : 24 Jan 2010 02:29:01 AM IST Last Updated : கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள். அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்? அதற்கு என்னதான் ஆதாரம்?பண்டைக் காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கியது கொற்கை மாநகரம். அது துறைமுகமாகவும் விளங்கியது. பாண்டிய நாட்டின் செல்வத்துக்கும
சங்க காலத்தில் சுயமரியாதை டி.எஸ்.தியாகராசன் First Published : 03 Jan 2010 12:14:00 AM IST Last Updated : கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து "சுயமரியாதை' என்ற சொல் தமிழர்களுக்குப் பழக்கமாகிவிட்டதொன்று எனில் மிகையல்ல. ஆனால், சுயமரியாதை என்பது நமது முன்னோர்கள் வாழ்க்கையில் இயல்பாக அமைந்ததொன்று.இன்றைக்கு அதிகாரம் பெற்ற யாரிடத்தும் கற்றறிந்த மாந்தர் யாராயினும், வளைந்தும், நெளிந்தும், குனிந்தும், கும்பிட்டும் புகழ் மொழிகளை மட்டும் பாடி இன்புறுவதைக் காணலாம். சுயமரியாதை என்பதே பிறர்க்குக் காட்டும் மரியாதையே என்பதாயிற்று!தமிழ்கூ